வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன்..! கண்காணிப்பு குழுவிற்கு பாஜக வேட்பாளர் பகிரங்க மிரட்டல்

தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்காததோடு, காவல்துறை மற்றும் குழுவினரை வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்திற்கு அலைய விடுவேன் என்று .பாஜக வேட்பாளர் மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The BJP candidate threatened the surveillance team that checked the car KAK

வாகன சோதனை தீவிரம்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி  வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு நிலைக்குழு அமைக்கப்பட்டு  இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு அணி குழு தலைவர் தலைமையில் ஒரு சப் இன்ஸ்பெக்டர், ஒரு தலைமை காவலர்,ஒரு காவலர் மற்றும் ஒரு வீடியோகிராபருடன் வாகன சோதனை நடத்தப்படுகிறது.

கண்காணிப்பு குழுவிற்கு மிரட்டல்

அதன் ஒரு பகுதியாக கோபி அருகே உள்ள கெட்டி செவியூர் குறிச்சி பிரிவில்  ஈரோடு - திருப்பூர் மாவட்ட எல்லையில், முருகேசன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமை காவலர் மகேந்திரன், காவலர் மெய்யானந்தம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இருந்தனர்.அப்போது திருப்பூரில் இருந்து வந்த பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் வந்த காரையும் கண்காணிப்பு நிலைக்குழவினர் நிறுத்தி  வாகன சோதனைக்காக முயன்றனர். அப்போது நடு வழியில் நிறுத்தப்பட்ட காரை ஓரமாக நிறுத்துமாறு தெரிவிக்கப்பட்டது. சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடைஞ்சலாக காரை நிறுத்தியதோடு, வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்து அதிகாரிகளோடு பாஜக வேட்பாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  மேலும் கண்காணிப்பு நிலைக்குழவை சேர்ந்த அலுவலர் முருகேசனின் அடையாள அட்டையை காண்பிக்குமாறு மிரட்டினார்.

நீங்கள் தான் எனக்கு குடும்பம் மாதிரி; வாக்காளர்கள் முன்னிலையில் கண்ணீர் விட்டு அழுத ஜோதிமணி

அதைத்தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் புகழேந்தியும் மற்ற காவலர்களும் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு. அளிக்குமாறு கூறவே, அவரது பெயரை கூறுமாறு வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மிரட்டும் வகையில் பேசினார். அப்போது அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுவதாக கணகாணிப்பு நிலைக்குழுவினர் கூறவே, ஆத்திரமடைந்த வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், மரியாதையாக பேசி பழகுங்கள், உங்கள் அனைவரையும் வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன் என்று பகீங்கிரமாக மிரட்டினார்.

The BJP candidate threatened the surveillance team that checked the car KAK

அதிகாரிகளுக்கு பகிரங்க மிரட்டல்

எத்தனை இடத்தில் சோதனை செய்வீர்கள் என்று கேட்டதோடு,  மிரட்டுகிறீர்களா? மிரட்டுமாறு உங்களிடம் யாராவது கூறி உள்ளனரா என்று தொடர்ந்து மிரட்டினார். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் ஏகமாக பரவி வருகிறது. பாஜக வேட்பாளர் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்காததோடு, காவல்துறை மற்றும் குழுவினரை வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்திற்கு அலைய விடுவேன் என்று மிரட்டிய சம்பவம் அதிர்சிசைய ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios