the app used by congress to prevent their members persuaded by opposite
கர்நாடகாவில் நிலவி வரும் அரசியல் பரபரப்பு சூழலில், பா.ஜ.க தலைவர் எடியூரப்பா காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரிடம் பேரம் பேசும் ஆடியோவை தற்போது காங்கிரஸ் வெளியிட்டிருக்கிறது. இந்த ஆடியோவில் எடியூரப்பாவே காங்கிரஸ் எம்.எல்.ஏ பாட்டீலுடன் பேரம் பேசி இருக்கிறார்.
அதில் கொச்சின் சென்று கொண்டிருக்கும் பாட்டீலிடம், கொச்சின் போக வேண்டாம். இங்கே வாருங்கள். உங்களை அமைச்சராக்குகிறேன் மேலும் என்ன வேண்டுமானாலும் செய்து தருகிறேன். என அழைத்திருக்கிறார் எடியூரப்பா. மேலும் எடியூரப்பாவின் மகன் விஜயேந்த் எம்.எல்.ஏவின் மனைவியிடம், 15 கோடி ரூபாய் தருகிறோம். அல்லது உங்கள் கணவருக்கு அமைச்சர் பதவி தருகிறோம். என்று பேசிய ஆடியோவையும் காங்கிரஸ் வெளியிட்டிருக்கிறது.
இந்த ஆடியோ இவ்வாறு பிடிபட காரணம் காங்கிரஸ் கட்சி உருவாக்கி இருந்த ஒரு அப்ளிகேசன் தான்.காங்கிரஸ் தங்களது கட்சி எம்.எல்.ஏக்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலும், அவர்களை நட்சத்திரவிடுதியில் தங்க வைக்கும் போது, காங்கிரஸ் தாங்கள் தொழில்நுட்ப குழு மூலம் உருவாக்கப்பட்ட ஒரு பிரத்யேக அப்ளிகேஷனை, அனைத்து எம்.எல்.ஏக்களின் மொபைல் ஃபோனிலும் இன்ஸ்டால் செய்து கொடுத்திருந்தது.
அந்த அப்ளிகேஷன் குறிப்பிட்ட எம்.எல்.ஏ-க்கு யாரிடமாவது இருந்து அழைப்பு வந்தாலோ, அல்லது சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ யாரையாவது அழைத்து பேசினாலோ, காங்கிரஸ் தொழில்நுட்பக் குழுவிற்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால் அனைத்து எம்.எல்.ஏக்களின் ஃபோனும் அவர்களுக்கு தெரியாமலே கண்காணிப்பின் கீழ் இருந்தது. இதனால் தான் பாட்டீலுக்கு எடியூரப்பா அழைப்பு விடுத்த போது அந்த ஆடியோ பதிவு செய்யப்பட்டு கையும் களவுமாக அவர் மாட்டி இருக்கிறார்
