The actress Rose complained about the jewelery stolen at home

ஐதராபாத்தில் உள்ள நடிகை ரோஜா வீட்டிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க நகை திருடப்பட்டுள்ளது.

செல்வமணி இயக்கத்தில் வெளியான செம்பருத்தி என்ற படத்தின் மூலம் தமிழிலும் பிரேம தவசு என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் நடிகையாக அறிமுகமானவர் ரோஜா. 

இவர் ஆந்திரமாநிலம் கடப்பாவில் பிறந்தார். இதுவரை ஏராளமான படங்களில் நடித்து முன்னனி நடிகை என்று வலம் வந்தார். 

சினிமா, தொலைக்காட்சி என்றில்லாமல் அரசியலிலும் கால் பதித்து வெற்றி கண்டார். தற்போது ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் எம்.எல்.ஏவாக உள்ளார். 

இவருக்கு ஐதராபாத்தில் வீடு ஒன்று உள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ரோஜா வீட்டிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க நகை திருடப்பட்டுள்ளது. 

வீட்டிலிருந்த நகை திருடு போனது குறித்து காவல்நிலையத்தில் நடிகை ரோஜா புகார் அளித்துள்ளார்.