The 7th Pay Commission recommendation has been issued to issue a pension promotion.

7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு அளிப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

உயர்த்தப்பட்ட ஊதிய விகிதப்படி இனி குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் ரூ.16,200 ஆகவும்,ஓய்வுபெறும் அரசு ஊழியருக்கான அதிகப்பட்ச ஓய்வூதியம் ரூ.1,12,500 இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒரு பகுதியினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வழக்கு தொடருவும் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இதைதொடர்ந்து, 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த அறிக்கையை நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.

இதையடுத்து அரசு ஊழியர்களுக்கு 2.5 மடங்கு ஊதியத்தை உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். 

மேலும், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வால் ஏற்படும் ரூ14,719 கோடி கூடுதல் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். 

ஊதிய உயர்வால் 7 லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு அளிப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

உயர்த்தப்பட்ட ஊதிய விகிதப்படி இனி குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் ரூ.16,200 ஆகவும்,ஓய்வுபெறும் அரசு ஊழியருக்கான அதிகப்பட்ச ஓய்வூதியம் ரூ.1,12,500 இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.