நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில் தான் உறுதியாக உள்ளதாகவும், இப்பிரச்சனையில் மத்திய அரசின் சூழ்ச்சிக்கு மாநில அரசு பலியாகிவிட்டதாக கொங்கு இளைஞர் பேரவை நிறுவனரும், அதிமுகவின்  தோழமை கட்சி எம்எல்ஏவுமான உ.தனியரசு தெரிவித்தார்.

நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தனது மருத்துவ படிப்பு கலைந்து போனதால் மனமுடைந்த  அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களும், அரசியல் கட்சியினரும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கொங்கு இளைஞர் பேரவை நிறுவனரும், அதிமுக தோழமைக்கட்சி எம்எல்ஏவுமான உ.தனியரசு, மறைந்த மாணவி அனிதாவின் வீட்டுக்குச் சென்று  அவரது தந்தையையும், சகோதரர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வை போராடி ரத்து செய்திருக்க வேண்டும் என கூறினார்.

மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில் தான் உறுதியாக உள்ளதாகவும், இப்பிரச்சனையில் மத்திய அரசின் சூழ்ச்சிக்கு மாநில அரசு பலியாகிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.