thangathamilchelvan question ops about jaya death
ஜெயலலிதா மரணம் குறித்து பிரதமர் மோடியையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று எடப்பாடி அணி ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா இறந்த போது கூட இத்தனை பரபரப்பு இல்லை. அந்த அளவுக்கு அனல் கக்கும் பேட்டிகளால் தகிப்பு கூட்டி வருகிறது ஓ.பி.எஸ்.அணியும், எடப்பாடி அணியும். தினகரன் வெளியேற்றப்பட்டது ஒரு நாடகம் என பன்னீர்செல்வம் டீம் பற்ற வைக்க, அந்த நெருப்பு தற்போது கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

சசிகலா தேர்தல் ஆணையத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பன்னீர் அணி ஒரு போடு போட, இதெல்லாம் அசால்டுங்க என்பது போன்று வெடிகுண்டு ஒன்றை வசீ எரிந்துள்ளது எடப்பாடி அணி..
கே.பி.முனுசாமியைத் தொடர்ந்து எடப்பாடி டீமைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதிமுகவில் இருந்து தினகரன் விலகியதில் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது என்பதில் தொடங்கி ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிவிசாரணையில் பிரதமரையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் உட்படுத்த வேண்டு்ம் என்பதில் வரை தங்கதமிழ்ச்செல்வன் பேச்சில் அத்தனை காரம்.

"அம்மா மேல சத்தியமா சொல்ற" "அம்மா மேல சத்தியமா சொல்ற" " அம்மா மேல சத்தியமா சொல்ற" ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிவிசாரணையில் அப்போது முதல் அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம், பிரதமர் மோடி, எய்மஸ் மருத்துவர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே ஆகியோரையும் உட்படுத்த வேண்டும்.
ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் பன்னீர்செல்வம் தானே முதல் அமைச்சராக இருந்தார். அப்போது நீதிவிசாரணை நடத்த தெரியாதா? மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுகளை கூறிவதை ஒருபோதும் ஏற்க முடியாது, இவ்வாறாக முடிகிறது தங்கதமிழ்ச்செல்வனின் பேட்டி
