தங்க தமிழ்செல்வன் இன்று மாலை மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளது உறுதியாகி இருக்கிறது. 

அமமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கடுத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகி இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய உள்ளார். இதற்காக தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவிவாலயத்தில் குவிந்து வருகின்றனர்.

அமமுகவில் இருந்து விலகி செந்தில்பாலாஜி, வி.பி.கலைராஜனை தொடந்து முக்கியப்புள்ளியான தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைய உள்ளார். அவர் திமுகவில் இணைய உள்ளதற்கு ’தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைய இருக்கிறார்; அவருடைய வருகை வரவேற்கத்தக்கது’’ என வி.பி.கலைராஜன் வரவேற்றுள்ளார். 

தேனி மாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் சென்னைக்கு வந்துள்ளனர். இதனை அடுத்து விரைவில் தேனியில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த விழாவில் மேலும் தனது ஆதரவாளர்களை திமுகவில் இணைக்க திட்டமிட்டுள்ளனர்.