கூவத்தூர் கூத்து, அருவருப்பான நடனங்கள்... ஒட்டுமொத்த தமிழ்நாடும் காறித் துப்பியதை இபிஎஸ் மறந்து விட்டாரா-திமுக

 எடப்பாடி பழனிசாமி யார் காவில் விழுந்து கும்பிட்டுப் பதவி பெற்றார். பிறகு விழுந்தவர் காலையே எப்படி வாரி விட்டார். "விபத்தில்" முதலமைச்சரான அவர் அப்பதவியை தக்கவைக்க நடத்திய "கூவத்தூர் கூத்தூ: அங்கு நடந்த அருவருப்பான நடனங்கள், எம்.எல்.ஏ.க்கள் சுவர் ஏறித் தப்பி ஓடும் காட்சிகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.

Thangam Tennarasu has said that the World Investors' Conference held during the AIADMK regime was a failed conference

முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்ற ஸ்டாலின்

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்றுள்ளார். இதனை விமர்சிக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார். இதற்கு பதிலடி கொடுத்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை பெறப் போகும் மாண்புமிகு முதலமைச்சர் மீது எடப்பாடி பழனிசாமி அவதூறு பேசுகிறார்.

அந்த அளவிற்கு அவருக்கு பொறாமையும் எரிச்சலும் மனதிற்குள் கோடை வெயிலை விட அவலாக கக்குகிறது. 13 நாள் பயணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எடப்பாடி பழனிசாமி செல்வதற்கு முன்பு அவரது மகன் மிதுன் அங்கு போனது பழனிசாமியின் ஊழல் பணத்தை முதலீடு செய்வதற்குத்தானோ என்ற கேள்வி இப்போது எழுகிறது. தனது மகனும், அவரது அமைச்சரவை சகாக்களும் என் சென்றார்கள் என்பதை விளக்குவாரா? 

ஆடியோ டேப் லீக் ஆனவுடன் லண்டனுக்கு பறந்த உதயநிதி,சபரீசன்.!இப்போ முதலீடு செய்யப்போகிறாரா ஸ்டாலின்-இபிஎஸ் கேள்வி

Thangam Tennarasu has said that the World Investors' Conference held during the AIADMK regime was a failed conference

கொடநாடு -மரத்தை வெட்டியது ஏன்.?

கொடநாடு கொலை மற்றும் அங்கு நடைபெற்றதாக கூறப்பட்ட தற்கொலைக்கு அடையாளமாக இருந்த மரத்தை வெட்டி சாட்சியங்களை மறைத்தது போன்ற மர்மங்கள் விலகும்போது எடப்பாடி பழனிசாமியின் உண்மை முகம் தெரிய வரும் என்பதில் சந்தேகமில்லை. அதுவரை அவதூறுகளை முதலீடுகளாக வைத்து அசிங்கமான அரசியல் செய்யாமல் இருப்பது திரு எடப்பாடி பழனிசாமிக்கு நல்லது. 2015 மற்றும்  2019-ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு எடுபடாத மாநாடு! போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எனக் "கணக்கு” காட்டப்பட்டதே தவிர, வந்த முதலீடுகள் எவ்வளவு என்று நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பார்த்தால் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக லட்சணமும். அவர் முதலீட்டை ஈர்த்த மாயத்தோற்றமும் வெட்ட வெளிச்சமாகி விட்டது. 

Thangam Tennarasu has said that the World Investors' Conference held during the AIADMK regime was a failed conference

அதிமுக உலக சுற்றுலா மாநாடு

இதனைத் தொழில்துறை அமைச்சராக இருந்த நான் பல முறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். உலக. முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் எடப்பாடி திரு பழனிசாமி நடத்தியது உலகச் சுற்றுலா மாநாடு! எங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அப்படி இல்லை. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலம் சீரழிந்த நிர்வாகத்தை சீர்ப்படுத்தி வருகிறார் படுபாதாளத்தில் விழுந்து கிடந்த நிதி நிலைமையை சரிசெய்து வருகிறார். ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து தொழில் தொடங்க "முதலீடு பெறுவதை" ஒரு முழு முயற்சியாகவும் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதை தினசரிப் பணியாகவும் செய்து வருகிறார், 

Thangam Tennarasu has said that the World Investors' Conference held during the AIADMK regime was a failed conference

முதலமைச்சர் வெளிநாடு சென்றது ஏன்.?

இப்போது ஜனவரி 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்புவிடச் செல்லும் முன்பு, துபாய் போனபோது எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள். எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளது என்பதை பட்டியலிட்டுள்ளார். ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 3 நாள் பயணமாகப் புறப்படும் முன்பு பத்திரிக்கைக் குறிப்பு வாயிலாகவும், விமான நிலையத்தில் பேட்டி வாயிலாகவும் இதுவரை தொழில் துறையில் பெற்ற முதலீடுகள் - போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை வெளிப்படையாக அறிவித்து விட்டுச் சென்றுள்ளார். ஆனால் இது எதையுமே படிக்காத எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் தொழில் முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தவும் நாள்தோறும் உழைக்கும் மாண்புமிகு முதலமைச்சரைப் பார்த்து தரக்குறைவாக அவதூறாக கீழ்தரமாகப் பேசி அரசியல் நாகரிகத்திற்கும் தனக்கும் ஆயிரம் மைல் தொலைவு என்பதை வெளிப்படுத்தியுள்ளார். 

Thangam Tennarasu has said that the World Investors' Conference held during the AIADMK regime was a failed conference

கூவத்தூர் கூத்து- அருவருப்பான நடனங்கள்

எடப்பாடி பழனிசாமி யார் காவில் விழுந்து கும்பிட்டுப் பதவி பெற்றார். பிறகு விழுந்தவர் காலையே எப்படி வாரி விட்டார். "விபத்தில்" முதலமைச்சரான அவர் அப்பதவியை தக்கவைக்க நடத்திய "கூவத்தூர் கூத்தூ: அங்கு நடந்த அருவருப்பான நடனங்கள், எம்.எல்.ஏ.க்கள் சுவர் ஏறித் தப்பி ஓடும் காட்சிகள், ஆம்னி பேருந்துகளில் அடைத்து எம்.எல்.ஏ.க்களைக் கொண்டு வந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது என அனைத்திலும் "கரன்சி பெட்டிகளை" கொடுத்து, தங்கக் கட்டிகளையும் கொடுத்தார் என்ற செய்தினைப் படித்து அப்போதே ஒட்டுமொத்த தமிழ்நாடும் காறித் துப்பியதை ஏனோ கடப்பாடி பழனிசாமி மறந்து விட்டார்.

Thangam Tennarasu has said that the World Investors' Conference held during the AIADMK regime was a failed conference

குறை கூற தகுதியும் இல்லை

முதலமைச்சர் பொறுப்பைத் தக்கவைக்கப் பணம்: ஓ.பி.எஸ் தகராறில் பொதுக்குழுவைக் கூட்டப் பணம்; அதில் மெஜாரிட்டி உறுப்பினர்களைப் பெறப்பணம்: வேண்டிய தீர்மானத்தை நிறைவேற்றப் பணம்: எல்லாவற்றையும் விட. பொதுச் செயலாளர் பதவியைப் பெற "பெட்டி பெட்டியாக" பணம் என கட்சி அரசியலையும், அசிங்கமாக அவர் ஆட்சியில் விட்ட "கான்டிராக்ட் ஊழல்" அரசியல் போல் நடத்திப் பதவியைப் பெற்று. பவனி வந்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெறும் திமுக ஆட்சியை, திராவிட மாடல் முதலமைச்சரைப் பற்றி குறை கூற தகுதியும் இல்லை, தார்மீக உரிமையும் இல்லையென தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா.! மோடிக்கு அதிர்ச்சி கொடுத்த எதிர்கட்சிகள்.. திமுகவும் அதிரடி அறிவிப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios