மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தார்.

சென்னை அண்ணா அறிவாலயம் வந்த தங்க தமிழ்செல்வவை அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி வரசேற்று அழைத்துச் சென்றார். அப்போது ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். தங்க தமிழ்செல்வனுக்கு ஸ்டாலின் மஞ்சள் நிற சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். செந்தில்பாலாஜி, வி.பி.கலைராஜனை தொடர்ந்து அமமுகவில் இருந்து முக்கியப்புள்ளியான தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்துள்ளார். தங்க தமிழ்செல்வன், மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து மஞ்சள் சால்வை அணிவித்தார்.

தேனி மாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் சென்னைக்கு வந்துள்ளனர். இதனை அடுத்து விரைவில் தேனியில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த விழாவில் மேலும் தனது ஆதரவாளர்களை திமுகவில் இணைக்க திட்டமிட்டுள்ளனர்.