Thanga Thamizhselvan Question

சசிகலா மற்றும் ஆதரவாளர்கள் வீட்டில் நடத்தப்படும் சோதனை குறித்து தங்க தமிழ்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். கருப்பு பண நடவடிக்கை எனில், சேகர் ரெட்டி மீதான நடவடிக்கையில் சுணக்கம் காட்டியது ஏன்? என்றும், சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் இடம் பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் இன்று அதிகாலியில் இருந்தே வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். 

சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்லூரியிலும் இன்று அதிகாலையில் இருந்தே சோதனை நடத்தப்பட்டு வருகிறது. டிடிவி தினகரன் அணி மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், திவாகரனின் உதவியாளர்கள் ராசுப்பிள்ளை, சுஜய் ஆகியோர் வீடுகளிலும் இன்று ஒரே நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது. இது மட்டுமல்லாது ஐதராபாத், பெங்களூரு, டெல்லி உன மொத்தம் 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமான வரித்துறையின் சோதனை குறித்து டிடிவி தினகரன் பேசுகையில், வருமான வரித்துறை சோதனை நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் எல்லாவற்றையும் துணிச்சலாக சந்திப்போம் என்றும் கூறியிருந்தார். 

தற்போது நடத்தப்பட்டு வரும் வருமான வரித்துறையின் சோதனை குறித்து டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசி வருகின்றனர். இது குறித்து டிடிவி ஆதரவாளரான தங்க தமிழ்செல்வன் கூறும்போது, கருப்புப்பண நடவடிக்கை என்றால், சேகர் ரெட்டி மீதான நடவடிக்கையில் சுணக்கம் காட்டியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் இடம் பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் தங்க தமிழ்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.