டிடிவி யின் கட்சியை மக்கள் ஏற்கவில்லை என அமமுக வின் முக்கிய நிர்வாகியான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்து உள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தங்க தமிழ்ச்செல்வன், "டிடிவி கட்சியை மக்கள் ஏற்கவில்லை என தெரிவித்தார். இந்த கருத்தை தான் தினகரனிடமே வெளிப்படுத்தி விட்டதாகவும் குறிப்பிட்டு உள்ளார் தங்க தமிழ்ச்செல்வன். 

அதேவேளையில் எப்போதும் ஆளும் அதிமுக அரசையும் எடப்பாடியும் எதிர்த்து பேசி வந்த தங்க தமிழ்ச்செல்வன், தற்போது முதல் முறையாக எடப்பாடியை பாராட்டியுள்ளார். அதாவது பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்ற திட்டத்தை கொண்டு வந்து அமல்படுத்துவதற்கு உண்மையில் மனமார்ந்த பாராட்டுக்கள் என தெரிவித்து உள்ளார்.

இதுநாள் வரையில், எடப்பாடி ஆட்சியை கவிழ்க்கவேண்டும் எனவும், எடப்பாடி எடுத்து வந்த எந்த ஒரு திட்டத்திற்கும் எதிர் கருத்துக்களை மட்டுமே சொல்லி வந்த தங்க தமிழ்ச்செல்வன் தற்போது முதல் முறையாக எடப்பாடிக்கு ஆதரவாக பேசி ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்துள்ளார். இதன்மூலம் எடப்பாடி ஆட்சி தொடர்வதை தங்க தமிழ்ச்செல்வன் ஆதரிப்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

இதெல்லாம் ஒருபக்கம்  இருக்க, தினகரனுக்கும் தங்க தமிழ்செல்வனுக்கும் ஏற்கனவே கருத்து வேறுபாடு இருந்து வருவதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.