தினகரனின் படையில் தளபதியாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்ததை அடுத்து அமமுக மற்றும் தினகரனின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சி பேட்டியில் காரசாரமான சவால் விட்டுள்ளார். 

அதில், சமூக வலைதளங்களில் அந்த இரண்டு கோடி ரூபாய் என்னாச்சி என்று அமமுக தொண்டர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே? எனக் கேட்டதற்கு, அதே நான் திருப்பிக் கேட்கிறேன். பாராளுமன்றத் தேர்தலில் எத்தனை கோடிகள் எனக்கு கொடுத்தார்கள்? கணக்கு கொடுத்தால் நானும் கணக்கு கொடுக்கிறேன். எத்தனை கோடி செலவுக்கு கொடுத்தீங்க? அதில் எத்தனை கோடி நான் எடுத்துக்கொண்டு போனேன் என்பதை கரெக்டா கணக்கு கொடுத்தால், நானும் கணக்கு சொல்கிறேன். இல்லன்னா நீங்க எவ்வளவு கொடுத்தீங்க? எவ்வளவு செலவு செஞ்சேன் என்ற தெளிவான கணக்கை மீடியாக்கிட்ட சொல்கிறேன் எனக் கூறியுள்ளார்.

அடுத்ததாக செலவுக்கு கொடுத்த பணத்தைத்தான் இவர் எடுத்துக்கொண்டு திமுகவுக்கு கிளம்பிட்டாரு என்கிறார்களே? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்  தங்க தமிழ்செல்வனை இரண்டாயிரம் கோடி கொடுத்தாலும் அசைக்க முடியாது.
 
அடுத்ததாக தேனியில் கூட்டம் போடுவதற்கான செலவே அமமுகவில் இருந்து தங்க தமிழ்செல்வன் எடுத்துக்கொண்டு போன பணம்தான் என்கிறார்களே? அந்த இரண்டு கோடிக்கு என்னதான் பதில்? என கேட்டுள்ளாரே? துரோகக் கூட்டம் என்று புரிந்து கொண்டுதான் அங்கிருந்து நான் வெளியே வந்தேன்.  

தினகரன் சொல்லி அமமுகவினர் இதனை பரப்பினால், அந்த  தினகரனை நான் கேட்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில், சட்டமன்ற இடைத்தேர்தலில் எவ்வளவு பணம் கொடுத்தீங்க. நான் எவ்வளவு செலவு பண்ணினேன். பட்டியலை நான் விடத்தயார். தினகரன், நான் 2 கோடி எடுத்தேன் என்பதை நிரூபிக்க அவரும் கணக்கை விடட்டும். சவால். சவாலாகவே நான் கேட்கிறேன் என சவால் விட்டுள்ளார்.