ஓப்பனிங் நல்லாதான்பே இருந்துச்சு ஆனா போகப்போக உங்க தலையெழுத்து தறுதலையா இருக்குதுப்பே!... தேனிப் பக்கமிருந்து டி.டி.வி. தினகரனின் சொந்த பந்த பெருசுகள் இப்படித்தான் அவரிடம் இப்படித்தான் குமுறுகின்றனவாம். இதை டி.டி.வி.யின் நெருங்கிய நட்புக்களே சொல்லி தலையிலடிக்கிறார்கள். 

எல்லாம் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க தீர்ப்பின் விளைவுதான். இந்நிலையில்! தினகரனின் தளபதியாகவும், அரசுக்கு எதிரான அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை கட்டி மேய்ப்பவராகவும் இருந்து வருகின்ற தங்க தமிழ்ச்செல்வன் இப்போது கடும் கவலையில் இருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாகி இருக்கிறது. 

தீர்ப்பு வந்த நாளன்றே “மேல் முறையீடு செய்வதா? தேர்தலை எதிர்கொள்வதா? அல்லது நாசமாக போவதான்னு விரைவில் முடிவு செய்வோம்!” என்று விரக்தியின் விளிம்பில் நின்று பேசியவர், நாட்கள் நகர நகர பேசும் வார்த்தைகள் தினகரனை பெரிதும் காயப்படுத்துகின்றனவாம். 

இந்நிலையில் இப்போது தங்க தமிழ்செல்வன் “தீர்ப்பு இப்படியாகிப் போச்சேன்னு சத்தியமா வருத்தமிருக்குது ஒத்துக்குறேன். தினகரன் சைடு இருக்கிற எம்.எல்.ஏ.க்களை இழுக்க அத்தனை வேலையும் நடந்துச்சு, நடக்குது. ஐம்பது கோடி, இருப்பத்தஞ்சு கோடி தர்றேன்னெல்லாம் சொன்னாங்க. என்னவாகுதுன்னு கவனிப்போம்.

அ.தி.மு.க.வோடு அ.ம.மு.க. இணைஞ்சுடுமுன்னு சொல்றாங்க. அப்படி எடப்பாடி மற்றும் பன்னீர் கூட தினகரன் இணைந்தால், நான் தினகரனை விட்டு விலகிடுவேன். இவ்வளவு ஏன், அரசியலை விட்டே விலகிப் போயிடுவேன்.” என்றிருக்கிறார். இல்லை என்பார் இருக்கும்! இருக்கிறது என்பார் ஆனால் இருக்கவே இருக்காது!...அதானே அரசியல்.