மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 3 பேரையும் விடுதலை செய்திருக்க மாட்டார் என அமமுகவின் தங்கத் தமிழ்செல்வன் அதிடியாக பேசியுள்ளார். 

முன்னாள்முதலமைச்சர் ஜெயலலிதா மீதுசொத்துக்குவிப்புவழக்குதொடரப்பட்டுகடந்த 2000ம்ஆண்டுகைதுசெய்யப்பட்டார்.ஜெயலலிதாவின்கைதைகண்டித்துதமிழகத்தின்பல்வேறுபகுதிகளில்போராட்டங்கள், கலவரங்கள்நடைபெற்றன

கலவரத்தின்போதுகோவைவேளாண்பல்கலைக்கழகத்தைச்சோ்ந்தமாணவிகள்சுற்றுலாசென்றிருந்தனா். பேருந்து தருமபுரி அருகேசென்றுகொண்டிருந்தபோதுபேருந்தைவழிமறித்தபோராட்டக்காரா்கள்மாணவா்களுடன்சோ்த்துபேருந்துக்குதீவைத்துகொளுத்தினா்


இந்தசம்பவத்தில்பல்கலைக்கழகமாணவிகள்கோகிலவானி, காயத்ரி, ஹேமலதாஆகிய 3 பேரும்சம்பவஇடத்திலேயேஉடல்கருகிஉயிரிழந்தனர்.இதனைத்தொடா்ந்துஇந்ததவழக்கில்நெடுஞ்செழியன், மாது, முனியப்பன்ஆகிய 3 பேருக்கு தூக்குதண்டனைவிதிக்கப்பட்டதுபின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது

இந்நிலையில் எம்.ஜி.ஆா். நூற்றாண்டுவிழாவைதொடா்ந்துமாநிலம்முழுவதும் 10 ஆண்டுகளுக்கும்மேலாகஆயுள்தண்டனைஅனுபவித்துவரும்சிறைகைதிகள்விடுவிக்கப்பட்டுவரும்நிலையில்இவா்கள்மூவரும்தங்களைவிடுவிக்கவேண்டும்என்றுகடிதம்எழுதியிருந்தனா்

இவா்களைவிடுவிக்கஆளுநா்ஒப்புதல்அளித்ததைத் தொடா்ந்துமூவரும்நேற்று பகல் 12.15 மணிக்குவேலூா்சிறையில்இருந்துவிடுவிக்கப்பட்டனர்.இந்த மூவர் விடுதலைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அமமுக செய்தித் தொடர்பாளர் தங்க தமிழ்செல்வன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியின் விருப்பத்திற்கேற்ப அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார். ஆனால் அமமுக இதனை ஏற்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் ஜெயலலிதா தற்போது உயிருடன் இருந்திருந்தால் கண்டிப்பாக அவர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்திருக்க மாட்டார் எனவும் அதிடியாக தெரிவித்தார்.