பெட்ரோலிய பொருட்கள் மற்றும் மதுபானங்களுக்கு விரைவில் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை, தி.நகரில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெட்ரோலிய பொருட்கள், மதுபானங்களுக்கு விரைவில் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என்று கூறினார்.

தமிழகத்தில் செம்மொழி ஆய்வு நிறுவனம் இடமாற்றம் செய்யப்படாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதை தமிழிசை நினைவு கூறினார்.

நீட் விவகாரத்தில், ஓராண்டு அவகாசம் அளித்தும் தமிழக அரசு ஒன்றும் செய்யவில்லை என்று தமிழிசை குற்றம் சாட்டினார். மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே பயிற்சி அளித்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார். கமல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கமல் அரசியலுக்கு வந்தவுடன் களத்தில் சந்திப்போம் என்று தமிழிசை சௌந்திரராஜன் கூறினார்.