தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு பதில் அளிக்கும் விதமாக "தி.மு.க.வும் நமதே, திகாரும் நமதே" என்று தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை  ஸ்டாலினின் ட்விட்டர் பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த வியாழன் கிழமை கரூரில் தி.மு.க. சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினாா். அப்போது, விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற தோ்தல், சட்டப்பேரவை தோ்தல், 20 தொகுதி இடைத்தோ்தல் என அனைத்து தோ்தல்களிலும் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளோடு இணைந்து வெற்றி பெறும். 

இந்த ஜனநாயக தோ்தலானது நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்பும் போராக அமையும். எனவே நாடும் நமதே, நாற்பதும் நமதே என்பதே நம்முடைய முழக்கமாக இருக்க வேண்டும் என்று தொிவித்திருந்தாா். 

Scroll to load tweet…

இதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பதிவில், மத்திய, மாநில அரசுகளுக்கு நம் மக்கள் மீது உள்ள அலட்சியத்திற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், 'கஜா புயல் பாதிப்பில் நடைபெறும் நிவாரணப் பணிகள்!' தமிழகத்தை காப்பாற்ற இவர்களை விரட்டும் ஜனநாயக போரில் இனி நமது முழக்கம், ‘’நாடும் நமதே!... நாற்பதும் நமதே!’’ என பதிவிட்டிருந்தார்.

Scroll to load tweet…

இந்நிலையில் ஸ்டாலினின் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில்; நாடும் நமதே நாற்பதும் நமதே. என்று கனவுகாணும் ஸ்டாலின்அவர்களே,!ஊழல் சர்க்கார் நமதே!ஊழலுக்கான சர்க்காரியா கமிஷனும் நமக்கே என்று நடந்த தி மு க ஊழல்ஆட்சியை மக்கள் மறக்கவில்லை! தி மு க வும்...நமதே!திகாரும்...நமதே ! என்று கடந்த காங்கிரஸ் கூட்டணியில் உங்கள்சாதனையையும் மக்கள்மறக்கவில்லை என கூறியுள்ளார்.