கோட்டையை நோக்கிய மனக்கோட்டையை டுவிட்டரில் கட்டினால் என்ன? கோவையில் கட்டினால் என்ன? சினிமாவைக் கோட்டை விட்டபின் வேறு என்ன கோட்டைதான் கட்ட? என நடிகர் கமலஹாசனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுளளார்.

கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தை சேர்ந்த ரசிகர் ஒருவரின் இல்ல திருமண வரவேற்பு விழா கோவை ஈச்சனாரியில் நடைபெற்றது.

இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.

அப்போது , தான் அரசியலை டுவிட்டரில் தொடங்கி விட்டதாகவும், ஆனால் அதை டுவிட்டரில் தொடங்கினால் என்ன? கோவையில் தொடங்கினால் என்ன? என செய்திளாளர்களிடம் தெரிவித்தார்.

கமலஹாசனின் கூறிய இந்த கருத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன், கோட்டையை நோக்கிய மனக்கோட்டையை டுவிட்டரில் கட்டினால் என்ன?கோவையில் கட்டினால் என்ன?சினிமாவைக் கோட்டை விட்டபின் வேறு என்ன கோட்டைதான் கட்ட? என கேள்வி எழுப்பி உள்ளார்.