Asianet News TamilAsianet News Tamil

தமிழிசை விரைவில் மாற்றம்…. தமிழக பாஜக புதிய தலைவராகப் போகிறவர் யார் தெரியுமா ?

தமிழக பாஜக தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜனின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. இதையடுத்து, அக்கட்சியின் புதிய  தலைவராக யார் வரப் போகிறார் என்ற பரபரப்பு நிலவுகிறது. வானதி சீனிவாசன் அல்லது சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரில் யாராவது ஒருவர் புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.,:


 

thamilisai  changesed from bjp president
Author
Chennai, First Published Oct 23, 2018, 8:10 AM IST

தமிழக பாஜக தலைவராக இரண்டு  முறை, இருந்துவிட்டதால்  தமிழிசை சவுந்திரராஜன் இந்த முறை கண்டிப்பாக மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்  அவரையே தொடர்ந்து தமிழக பா.ஜ., தலைவர் பதவியில் நீடிக்க வைக்க முடியாது.

அதனால், புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில், அகில இந்திய பாஜக  தலைமை தீவிரமாகி இருக்கிறது. தற்போது கட்சியின் மாநில பொது செயலர்களாக இருக்கும் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரது பெயர்கள், அடுத்த தலைவருக்கான பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது..

thamilisai  changesed from bjp president

இதில், வானதி சீனிவாசனுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு இல.கணேசன், தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் சிபாரிசு செய்து இருப்பதாக கூறப்படுகிற்து.

thamilisai  changesed from bjp president

இந்த மூவரில்  மூவரில், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கே தலைவராகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக பாஜக மேலிட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios