Asianet News TamilAsianet News Tamil

எங்களுக்குள் பிளவு இல்லை; ஒ.பி.எஸ்ஸுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் - முதல்வரை சந்தித்த பின் தம்பிதுரை விளக்கம்

thambithurai meet chief minister edappadi palanichami
thambithurai meet-chief-minister-edappadi-palanichami
Author
First Published Apr 17, 2017, 6:08 PM IST


எங்களுக்குள் பிளவு இல்லை எனவும் ஒ.பி.எஸ்ஸுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னதை பெற்று தர லஞ்சம் வாங்கியதாக டில்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்ற புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், டிடிவி தினகரனிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினகரனை கைது செய்ய டில்லி குற்றப்பிரிவு போலீசார் நாளை சென்னை வருகின்றனர்.

இதனிடையே ஒ.பி.எஸ் அணியும் எடப்பாடி அணியும் இணைவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதைதொடர்ந்து துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், அதைதொடர்ந்து தற்போதும் தம்பிதுரை எடப்படியை சந்தித்து 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பிறகு துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

கட்சியில் பிளவு என்பதே இல்லை. அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளோம்.

தொகுதி வளர்ச்சி தொடர்பாகவே முதலமைச்சரிடம் பேசினேன்.

கட்சியில் வேறுபாடு இருப்பது சகஜம்.

ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடு இருக்கலாம்.

கருத்து வேறுபாடை கடந்து அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். ஆட்சியை தக்கவைப்பது மிக முக்கியம்.

தற்காலிகமாகத்தான் இரட்டை இலை சின்னம் முடக்கம். இடைத்தேர்தலுக்காக தான் இரட்டை இலை முடக்கப்பட்டது.

கட்சியில் கருத்து வேறுபாடு நடத்த பேச்சுவார்த்தை நடத்தலாம்.

அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற பன்னீர்செல்வத்தின் கருத்து வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios