Thambidurai pressmeet about rule of dream

எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தற்போது ஆன்மீகத்தில் நாட்டம் வந்துள்ளது என்றும், யாரோ ஒரு ஜோதிடர் சொன்னதை நம்பி ஆட்சிக்கு வரலாம் என்ற நம்பிக்கையில் ஊர், ஊராக சென்று அவர் குளங்களை தூர் வாரி வருவதாகவும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். 

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக கட்சியும், ஆட்சியும் காப்பாற்றப்பட வேண்டும் என்று பொது மக்கள் நினைக்கிறார்கள், அவர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது என தெரிவித்தார்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது என்றும், ஜெயலலிதாவின் திட்டங்களை இந்த அரசு விரைவாக நிறைவேற்றி வருவதாகவும் கூறினார்.

அதிமுகவுக்கு தலைவர் யார்? பொதுச் செயலாளர் யார்? என்பது குறித்து அனைவருக்கும் தெரியும் என்று தம்பிதுரை தெரிவித்தார்.

கீழடியில்அருங்காட்சியம் அமைக்க வேண்டும், கலாச்சரத்தை பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தற்போது ஆன்மீகத்தில் நாட்டம் வந்துள்ளது என்றும், யாரோ ஒரு ஜோதிடர் சொன்னதை நம்பி ஆட்சிக்கு வரலாம் என்ற நம்பிக்கையில் ஊர், ஊராக சென்று அவர் குளங்களை தூர் வாரி வருவதாகவும் தம்பிதுரை கூறினார்.

பாஜக உத்திரபிரதேசத்தை ஆளுகிறது, இந்தியாவை ஆளுகிறது
தமிழகத்தை புரட்சி தலைவி அம்மா கழகம் தான் ஆண்டு கொண்டிருக்கிறது என்றார்..

சசிகலா, பொதுக் குழுவால் பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே அவரை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும் தம்பிதுரை தெரிவித்தார்..