நெஞ்சுவலியால் அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ள மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

நாடாளுமன்ற துணை சபாநாயகரும், கரூர் எம்.பி.யும், அ.தி.மு.க.வின் சீனியர் மோஸ்ட் தலைவருமான தம்பிதுரை நெஞ்சு வலியின் காரணமாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தம்பிதுரை. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில்,  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறும் தம்பிதுரையிடம் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்தார். 

இதனையடுத்து,  சிகிச்சை முடிந்து திரும்பிய தம்பிதுரை  முதல்வர் இல்லத்தில் நாளை நடைபெற உள்ள சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர் குறித்து ஆலோசணை ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர், கழக துணை ஒருங்கிணைப்பாளர்  முனுசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் பங்கேற்றனர்.