thambidurai dinakaran travelled in same flight
லஞ்ச வழக்கு விசாரணைக்காக டெல்லி சென்றுள்ள டிடிவி தினகரனும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் ஒரே விமானத்தில் பயணம்செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..
இரட்டை இலைக்கு லஞ்சம் அளித்த புகாரில் விசாரணைக்கு ஆஜராகும்படி டிடிவி தினகரனுக்கு டெல்லி போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்புசம்மன் அளித்தனர். ஆனால் விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் அளிக்கும் படி தினகரன் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 22 ஆம் தேதி(இன்று) விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து வேறு வழியின்றி டிடிவி.தினகரன் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். இதற்கிடையே தினகரன் பயணித்த அதே விமானத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் பயணித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விமானப் பயணத்தின் போது மன அழுத்தத்தில் டிடிவிக்கு தம்பிதுரையே ஆறுதல் அளித்ததாகவும் கூறுகின்றனர் தகவல் அறிந்தவர்கள்
