ஆப்கானிஸ்தான் நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றால் 4 ஆயிரத்து 900 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதுவரைக்கும் 127 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

தினந்தோறும் அங்குள்ள மக்கள் நாள்தோறும் அச்சத்துடனே வாழ்ந்து வருகிறார்கள்.இந்த நிலையில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் அங்கு நடத்தி வருகிறார்ககள்., காபூல் நகரின் மேற்கே அமைந்த மகப்பேறு மருத்துவமனைக்குள் பயங்கரவாதிகள் சிலர் புகுந்தனர்.அவர்களை போலீசார் தடுத்தம் பலனில்லை.அங்கு பல மணிநேரம் இரு தரப்புக்கிடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

இந்த தாக்குதலில் 2 குழந்தைகள்,பெண்கள் மற்றும் எண்ணற்ற செவிலியர்கள் உள்பட 16 பேர் பலியாகினர்.  சண்டை நடந்தபொழுது, குழந்தைகள் மற்றும் அவர்களின் அம்மாக்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றும் பணியில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

இதுபற்றி அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், மகளிர் மற்றும் குழந்தைகள் என 100 பேர் கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.  அவர்களில் 3 பேர் வெளிநாட்டினர்.  இந்த தாக்குதலில், பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் என 15 பேர் காயமடைந்து உள்ளனர் என தெரிவித்துள்ளது.  பின்னர் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டு விட்டனர் என மற்றொரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.