Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் நடந்த பயங்கரம்..!! பாம்பு கடித்ததில் கிட்டதட்ட 20 ஆயிரம் பேர் பாதிப்பு..!!

அம்மாவின் அரசு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

Terror in Tamil Nadu in the last 5 months. Nearly 20 thousand people were affected by the snake bite.
Author
Chennai, First Published Sep 5, 2020, 12:27 PM IST

கொரோனா காலத்திலும் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை மையங்களில் சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அம்மாவின் அரசு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைகள் தங்குதடையின்றி சிறப்பான முறையில் அளித்திட தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

Terror in Tamil Nadu in the last 5 months. Nearly 20 thousand people were affected by the snake bite.

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்னெடுப்பு திட்டத்தின் Tamil Nadu accident and emergency care initiative கீழ் செயல்பட்டுவரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களில் மார்ச் 2020 முதல் இதுவரை 1,52,118 நபர்களுக்கு விபத்து உள்ளிட்ட நிகழ்வுகளால் ஏற்பட்ட காயங்களுக்கு அவசரகால சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 63.633 நபர்களுக்கு உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. சமயங்களில் விஷம் அருந்துதல் உள்ளிட்ட சுயத்தீங்கு ஏற்படுத்திக்கொண்ட 52,849 நபர்களுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

Terror in Tamil Nadu in the last 5 months. Nearly 20 thousand people were affected by the snake bite.

பாம்பு கடித்த 19,948 நபர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது, மேலும் 4,494 குழந்தைகளுக்கு அவசர உயிர்காக்கும் சிகிச்சைகளும் 4,432 நபர்களுக்கு மாரடைப்பிற்கான சிகிச்சைகள், 7 ஆயிரத்து 775 நபர்களுக்கு பக்கவாத நோய்க்கான சிகிச்சைகள் என மொத்தம் 2 லட்சத்து 41 ஆயிரத்து 615 நம்பர்களுக்கு அவசரகால சேவைகள் அளிக்கப்பட்டு விலைமதிப்பில்லாத உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் அவர்களின் மக்கள் நலன் காக்கும் பணிகள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று காலத்திலும் தமிழக அரசின் செயல்பாடு அனைவரின் கவனத்தையும் தொடர் பாராட்டையும் பெற்று வருகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios