Asianet News TamilAsianet News Tamil

இதுக்கு மேல வேலுமணியை அசிங்கப்படுத்தவே முடியாது.. தாறுமாறாக விமர்சித்த கே.என்.நேரு..!

அமைச்சர் பதவி போனால் கோவை சிறையா, சென்னைப் புழல் சிறையா- எந்தச் சிறையில் அடைக்கப்படுவோம் என்று வேலுமணிக்கு இப்போது பித்துப் பிடித்தே விட்டது. அது தற்போது தலைக்கேறி விட்டது என கே.என்.நேரு கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 

tendor corruption issue...dmk kn nehru slams minister velumani
Author
Tamil Nadu, First Published Jul 8, 2020, 1:35 PM IST

அமைச்சர் பதவி போனால் கோவை சிறையா, சென்னைப் புழல் சிறையா- எந்தச் சிறையில் அடைக்கப்படுவோம் என்று வேலுமணிக்கு இப்போது பித்துப் பிடித்தே விட்டது. அது தற்போது தலைக்கேறி விட்டது என கே.என்.நேரு கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 
 
இதுதொடர்பாக திமுகவின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனாவிலும் கொள்ளையடிக்கும் ஒரு கேடுகெட்ட “முன்னணி”யான- இழிபிறவி ஒன்று இருக்கும் என்றால் அது உள்ளாட்சித் துறை அமைச்சராக வலம் வந்து கொண்டிருக்கும் வேலுமணிதான். ஊழல் கறை படிந்த கைகளுக்குச் சொந்தமான வேலுமணிக்கு எங்கள் கழகத் தலைவர் பற்றி விமர்சிக்க எவ்விதத் துப்பும் இல்லை - துளிகூட அருகதையும் இல்லை.

tendor corruption issue...dmk kn nehru slams minister velumani

கொள்ளையடித்துத் தன் கஜானாவை நிரப்பவும் - அடித்த பணத்தில் கப்பம் கட்டவும் - அமைச்சர் பதவி என்பதில் அமர்ந்து - பிழைப்பு நடத்தும் கேடு கெட்ட பிறவியான வேலுமணி எங்கள் கழகத் தலைவருக்கு சான்றிதழ் தர என்ன யோக்கியதை இருக்கிறது? கொடுக்கிற கப்பத்திற்கும் - அடிக்கின்ற கொள்ளைக்கும் தற்போது “எடப்பாடியார்” புகழ் பாடட்டும். எங்கள் கழகத் தலைவரின் திசைப் பக்கம் திரும்பி நிற்கக் கூட தகுதியில்லாதவர் வேலுமணி. வேலுமணிக்கு உள்ளபடியே மானம் வெட்கம் இருந்தால் நகராட்சி நிர்வாகத் தலைமைப் பொறியாளர் நியமனக் கோப்புகளையும் - உள்ளாட்சித்துறையின் ஊழலுக்கு எல்லாம் ஜால்ரா போட்டு இதுவரை அவர் கையெழுத்துப் போட்ட கோப்புகளையும் சி.பி.ஐ. விசாரணைக்குக் கொடுத்து விட்டு- இந்த அறிக்கை விட்டிருக்க வேண்டும். அந்த சுயமரியாதை எல்லாம் வேலுமணிக்கு இல்லை என்பது எனக்குத் தெரியும்.

tendor corruption issue...dmk kn nehru slams minister velumani

ஏனென்றால் அவர் கோவை ராவணனுக்குக் கால் கழுவினார். அம்மையார் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவிடம் மண்டியிட்டார். கூழைக் கும்பிடு போட்டு நின்றார். பிறகு டி.டி.வி. தினகரனிடமும் வளைந்து குனிந்து நெளிந்து நின்று வணக்கம் போட்டார். கூவத்தூரில் “கொண்டாட்டம்” நடத்தி இந்த நாடே காறித்துப்பும் செயலில் ஈடுபட்டார். உள்ளாட்சித் துறை அமைச்சராக அடித்த கொள்ளைகள் அவரை ரொம்பவே மன நலம் பாதிக்க வைத்திருக்கிறது. அமைச்சர் பதவி போனால் கோவை சிறையா, சென்னைப் புழல் சிறையா- எந்தச் சிறையில் அடைக்கப்படுவோம் என்று வேலுமணிக்கு இப்போது பித்துப் பிடித்தே விட்டது. அது தற்போது தலைக்கேறி விட்டது. அதனால்தான் தனது வேட்டி அவிழ்ந்தாலும் பரவாயில்லை - கடைசி வரை கொள்ளையடித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அமைச்சர் பதவியில் தொடருகிறார்.

tendor corruption issue...dmk kn nehru slams minister velumani

மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கிறார். நடராஜன் உயர்நீதிமன்றத்திலேயே வழக்குத் தொடர்ந்து விட்ட பிறகும்- இன்னும் தன் முறைகேட்டை மறைக்கப் படாத பாடுபடுகிறார் வேலுமணி. எங்கள் கழகத் தலைவர் எழுப்பியது ஏதோ ஒரு “நிர்வாக மாற்றம்” குறித்து மட்டும் அல்ல. 17 ஆயிரம் கோடித் திட்டத்தினை நிறைவேற்றும் இடத்தில் ஏன் “பணி நீட்டிப்புச் செய்த புகழேந்தியை” அதுவும் - ஏற்கனவே இருந்த ஒரு தலைமைப் பொறியாளர் நடராஜனை மாற்றி விட்டு நியமித்தீர்கள்? சென்னை மாநகராட்சியில் இருந்து பொறியாளரை நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் நியமிக்கக் கூடாது என்று அரசு விதி இருக்கிறது. அந்த விதியை ஏன் மீறினீர்கள்? சென்னை மாநகராட்சியில் 20ஆம் தேதி பணிநீட்டிப்புக் கோரி மனுக் கொடுத்து, 21ஆம் தேதியே மாநகராட்சி ஆணையர் பரிந்துரைத்து - 30ஆம் தேதியே புகழேந்திக்குப் பணி நீட்டிப்பு வழங்கியது ஏன்? இப்படிப் பணி நீட்டிப்புக் கேட்ட எத்தனை பேருக்கு மின்னல் வேகத்தில் வழங்கப்பட்டுள்ளது? பணி நீட்டிப்பு வழங்கி தலைமைப் பொறியாளர் பதவிக்குப் பதில் - முதன்மை தலைமைப் பொறியாளர் பதவியாக தரம் உயர்த்தியும் கொடுத்தது ஏன்?

ஒரு பதவியில் இருப்பவர் அதே பதவியில் பணி நீட்டிப்பு செய்யப்படுவது வழக்கம் என்று எங்கள் கழகத் தலைவரே சுட்டிக்காட்டி- இவருக்கு மட்டும் பதவியைத் தரம் உயர்த்திக் கொடுத்தது ஏன் என்று கேட்டார். அதற்குப் பதில் என்ன? ஏற்கனவே நான்கு வருடம் மாநகராட்சியில் பணி நீட்டிப்பு, பிறகு நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் மீண்டும் ஒரு வருடம் பணி நீட்டிப்பு எனப் புகழேந்திக்கு மட்டும் வழங்கியது ஏன்? இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வக்கில்லாத வேலுமணி தன் மனம் போன போக்கில் ஏதோ ஓலைப் பாயில் “போவது” போல் அறிக்கை விடுவது அவருக்கு அவமானமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் வகிக்கும் அமைச்சர் பதவிக்குப் பெருத்த அவமானம். அது அறிக்கை அல்ல, வாந்தி - அதுவும் வேலுமணி தன் விரலை விட்டு வலுக்கட்டாயமாக எடுத்திருக்கும் வாந்தி!

tendor corruption issue...dmk kn nehru slams minister velumani

புகழேந்தி ஒரு “மெக்கானிக்கல் எஞ்சினியர்”. அவர் எப்படி சிவில் பணிகளை- குறிப்பாக சீர்மிகு நகரங்கள் என்று கூறக்கூடிய “ஸ்மார்ட் சிட்டி” பணிகளைக் கவனிக்க முடியும். ஸ்மார்ட் சிட்டி பணிகள் மட்டும் அல்ல- மத்திய அரசின் பல்வேறு திட்டப் பணிகளும் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் நடக்கிறது. அந்தப் பணிகள் பற்றியெல்லாம் வேலுமணி ஏன் வாய் திறக்கவில்லை? மெக்கானிக்கல் எஞ்சினியருக்கும், சிவில் எஞ்சினியருக்கும் கூட வித்தியாசம் தெரியாத ஒரு “கூமுட்டை” உள்ளாட்சித்துறை அமைச்சராக இருப்பது தமிழக அமைச்சரவையின் சாபக்கேடு! கட்டுமானப் பணிகளுக்கு தொழில்நுட்ப அனுமதி கூட வழங்கத் தகுதியில்லாத புகழேந்தியை மாநகராட்சியில் வைத்து 5000 கோடி ரூபாய் திட்டங்களை நிறைவேற்றியது எப்படி? அதில் அமைச்சர் வேலுமணி செய்த ஊழல் எவ்வளவு? எத்தனை டெண்டர்கள் அமைச்சருக்கு வேண்டியவர்களுக்குப் போனது? ஆன்லைன் டெண்டர் என்கிறார் அமைச்சர் வேலுமணி.

அவருக்குத் தைரியம் இருந்தால், எந்த ஆன்லைன் டெண்டரிலும் “நிபந்தனைகள்” சேர்ப்பதில்லை “சான்றிதழ்கள்” தரச் சொல்லி நிபந்தனை வைப்பதில்லை, தகுதியான யாரை வேண்டுமானாலும் ஆன்லைனில் டெண்டர் போட வைத்திருக்கிறோம். ஒரு ரூபாய் கூட டெண்டரில் நான் சம்பாதிக்கவில்லை. நான் டெண்டரில் தலையிடுவதே இல்லை என்று வெளிப்படையாக அறிவித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்கும் ஆண்மை அமைச்சர் வேலுமணிக்கு இருக்கிறதா? அந்த ஆண்மை இல்லையென்றால்- உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் காலகட்டத்தில் விடப்பட்ட டெண்டர்கள் பற்றி எல்லாம்- குறைந்தபட்சம் ஒரு விசாரணை ஆணையம் அமைக்க நான் தயார் என்று அறிவிக்கும் திராணியும், தெம்பும் இருக்கிறதா?

tendor corruption issue...dmk kn nehru slams minister velumani

அப்படியொரு விசாரணை ஆணையம் அமைத்து- அந்த ஆணையம் உள்ளாட்சி துறை டெண்டர்களில் முறைகேடே நடக்கவில்லை என்று கூறிவிட்டால்- நான் அரசியலுக்கு முழுக்குப் போட்டு விடுகிறேன். ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லி விட்டால்- வேறு வழக்கு விசாரணை இல்லாமலேயே நான் ஜெயிலுக்குப் போகத் தயார் என்று வேலுமணி அறிவிக்கத் தயாரா? என கே.என்.நேரு குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios