Asianet News TamilAsianet News Tamil

இது வெறும் டிரைலர் தான்.. இனிமேல் தான் மெயின் பிச்சரை பார்க்க போறீங்க.. அமைச்சர் சேகர்பாபு அதிரடி..!

கோயில் நிலங்கள் தனியார்களால் ஆக்கிரமிக்கப்படுவதை இந்து சமய அறநிலைய துறை ஒருபோதும் அனுமதிக்காது என அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Temple lands cannot be allowed to be occupied... minister Sekarbabu
Author
Chennai, First Published Jun 7, 2021, 12:10 PM IST

கோயில் நிலங்கள் தனியார்களால் ஆக்கிரமிக்கப்படுவதை இந்து சமய அறநிலைய துறை ஒருபோதும் அனுமதிக்காது என அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சென்னை சாலிகிராமம் காந்திநகரில் தனியார் வாகனங்கள், கட்டுமான கழிவால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வடபழனி கோவிலுக்கு சொந்தமான 250 கோடி மதிப்புள்ள 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த இடங்களில் அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழக அரசு 30 நாள் நிறைவு செய்துள்ளது டிரைலர் தான்; இனி தான் மெயின் பிக்சர் பார்ப்பீர்கள்.

Temple lands cannot be allowed to be occupied... minister Sekarbabu

யார் தவறு செய்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும். தடைப்பட்டிருந்த இந்த இடமானது முழுக்க சமுதாயம் சார்ந்து ஏழை எளியவர்கள் பயன்படுகின்ற வகையில் சமுதாய நோக்கத்தோடு இந்த இடத்தை பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார். அனைவரும் கலந்து ஆலோசித்து இந்த இடத்தில்  ஏழை மக்கள், அடித்தட்டு மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் மேம்படுவதற்கான திட்டம் நிச்சயமாக இந்த இடத்தில் செயல்படுத்த முதலமைச்சர் அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என தெரிவித்தார்.

Temple lands cannot be allowed to be occupied... minister Sekarbabu

தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை 100 நாளில் செயல்படுத்துவோம். கோயில் நிலங்கள் தனியார்களால் ஆக்கிரமிக்கப்படுவதை இந்து சமய அறநிலைய துறை ஒருபோதும் அனுமதிக்காது. அதை மீட்போம். கோயில் நிலங்களில் குடியிருப்போர் அந்த நிலத்திற்கு உரிமை கோர முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios