மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவுக்கு வட இந்திய நடிகர் நடிகைகளை அழைத்து  அவர்களுடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துள்ள நிலையில் தென்னிந்திய நடிகர்களை புறக்கணித்திருப்பது வேதனை அளிக்கிறது என தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவி டிவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளார்.

   

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி குறும்படம் ஒன்று வெளியிட்டார்,  டெல்லியில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் கலந்து கொண்டனர்.  ஷாருக்கான், அமீர்கான்,  கங்கனா ரனாவத், சோனம் கபூர், போனிகபூர்,  இம்தியாஸ் அலி  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  அவர்களுடன் மோடி  கலந்துரையாடியதுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.  அப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் அவர்களுடன் உரையாற்றிய மோடி ,  மகாத்மா  காந்திக்கு வணக்கம் செலுத்த அனைவரும் ஒன்றுகூடி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 

மகாத்மா காந்தியின் போதனைகள் மற்றும் அவரின் அறப் போராட்டத்தை சமூகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டியது திரைத்துறையில் உள்ளவர்களின் கடமை  நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை  நாட்டு மக்களுக்கு திரை நட்சத்திரங்கள் அவர்களின் படங்களிட் மூலம் எடுத்துரைக்கு வேண்டும் என்றார். இந்நிலையில் தனது கருத்தை தெரிவித்துள்ள தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவி உபசனா காமினேனி கொனிடோலா,  மகாத்மா காந்தியின் பிறந்ததின நிகழ்ச்சிக்கு தென்னிந்திய நடிகர் நடிக்கைகளை புறக்கணித்து இருப்பது வேதனை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பாலிவுட் நடிகர்களை இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி அழைத்துள்ளதை மதிக்கிறொம், அதில் இந்தி நடிகர் நடிகைகளை மட்டும் அழைத்துவிட்டு  தென்னிந்திய நடிகர்களை முற்றிலும் புறக்கணித்து இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.