Asianet News TamilAsianet News Tamil

கட்டிங்கா ? ஷேவிங்கா? என்ன வேணும் உங்களுக்கு ? வடிவேல் பாணியில் களம் இறங்கிய வேட்பாளர்கள்…. தெலுங்கானாவில் நடக்கிற கூத்த பாருங்க!!

தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்லுக்காக கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நிலையில், வாக்காளர்களை கவருவதற்காக வேட்பாளர்கள் செய்யும் காரியம் வடிவேல் பாணியில் அமைந்துள்ளது. தெருவில் போவோர் வருவோருக்கெல்லாம் கட்டிங், ஷேவிங் செய்து அசரவைக்கின்றனர்.

telemgana election candidates campaign
Author
Hyderabad, First Published Oct 31, 2018, 10:11 PM IST

தெலுங்கானாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வாக்காளர்களை எப்படியாவது கவரவேண்டும் என்று வேட்பாளர்கள் செய்யும் செயல்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது.

telemgana election candidates campaign

அவர்களின் பெரும்பாலான செயல்கள் மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. முடி வெட்ட வேண்டுமா? ஷேவிங் செய்ய வேண்டுமா? குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டுமா? சாப்பாடு வேண்டுமா? என அனைத்திற்கும் தயாராக வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். பிற மாநிலங்களில் இல்லாத அளவு அடிமட்டம் வரையில் சென்று பிரசாரத்தை  முடுக்கி விட்டுள்ளனர்.

தெருவில் சற்று அதிக முடியுடனோ,  தாடியுடனோ யாராவது நடந்து சென்றால் அவர்களை வலுக்கடாயமாக இழுத்து வந்து வடிவேல் பாணியில் கட்டிங், ஷேவிங் செய்து விடுகிறார்கள். மறக்காமல் எங்களுக்கு வாக்களியுங்கள் என்பதையும் அவர்கள் சொல்லி விடுகிறார்கள்.

telemgana election candidates campaign

சங்கரரெட்டி தொகுதியின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் வேட்பாளர் சிந்தியா பிரபாகர் மக்களுக்காக சமையல் செய்கிறார். வயதானவர்களை கட்டியணைத்து, பென்ஷன் பணம் தொடர்பான தகவல்களை விசாரிக்கிறார்.

வாக்குகளை பெற கட்டிங், ஷேவிங் செய்து குளிப்பாட்டும் அளவிற்கு நிலை அங்கு சென்றுள்ளது. சித்திபேட் தொகுதியின் வேட்பாளர் ஹரிஷ் ராவ் தரப்பில் அனுபவம் பெற்ற தொழிலாளர்கள் கட்டிங், ஷேவிங் இலவசமாக செய்து வருகிறார்கள். இதுபோன்று வாக்காளர் வீட்டில் சாவு நிகழ்ந்தால் பாடையை சுமப்பது செல்லும் காட்சிகளும் அங்கு நடைபெற்று வருகிறது. 

telemgana election candidates campaign

வாக்குகளை பெற எந்த நிலைக்கும் செல்வார்கள் என்பதை காட்டும் வகையில் அங்கு சம்பவம் தொடர்வது மக்களை  அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. வாக்குகளுக்காக தரை மட்டத்துக்கு இறங்கி அடிக்கும் இந்த வேட்பாளர்கள்  ஜெயித்து சென்றுவிட்டால் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள் என்கிறார்கள் வாக்காளர்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios