தெலுங்கு ஊடகங்களில் பட்டைய கிளப்பும் தமிழிசை..! எந்த பக்கம் திரும்பினாலும் தமிழிசை  பற்றின செய்தியே..!  

வரும் 8ம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக பதவியேற்கவுள்ள தமிழிசை சௌந்தரராஜன் இப்போது தெலுங்கு ஊடகங்களில் வலம் வர தொடங்கி உள்ளார். 

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்க படுகிறார் என்ற அறிவிப்பை செப்டெம்பர் 1 ஆம் தேதி குடியரசு தலைவர் அலுவலகம் அறிவித்து இருந்தது.

இதற்கு முன்னதாக தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களும் விமர்சனம் செய்து வந்த நிலையில் பாஜகவை விட அதிக விமர்சனத்திற்கு உள்ளானவர் தமிழிசை சௌந்தரராஜன். காரணம்.... அவருடைய பணிவான பேச்சும் திறமையான செயல்திட்டங்களும், நம்பிக்கை மிக்க பெண்ணாய் கட்சிக்காக அரும்பாடுபட்டவர் என்பதால் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர். 

இதற்கிடையே அவரைப் பற்றி மனதை பாதிக்கும் வகையில் மீம்ஸ் கிரியேட் உருவாக்கப்பட்டு சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வந்திருந்த காலம் மாறி இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், பாஜக தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் எந்த முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக... கட்சிக்காக அரும்பாடுபட்ட தமிழிசை சௌந்தரராஜனை ஆளுநராக நியமித்து அழகு பார்க்கிறது பாஜக.

தமிழிசை சௌந்தரராஜன் பொருத்தவரையில் காலை எழுந்தவுடன் இரவு தாமதமாக உறங்கும் வரை எப்போதும் கட்சிப் பணிக்காக பம்பரம்போல் சுழன்று வேலை செய்து வந்தவர். அவ்வப்போது விமான நிலையங்களில் மட்டுமே அவரிடம் பேட்டி பெற முடியும். இப்போது இந்த நிலைமை மாறி தமிழக ஊடகங்களை விட்டு தெலுங்கானா மாநில ஊடகங்களில் தமிழிசையின் முகம் தெரிய ஆரம்பித்துள்ளது.

ஆளுமைமிக்க பதவியான.. அதிகாரமிக்க பதவியான... ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்க உள்ளார். இவரைப்பற்றிய செய்திகள், கட்சியில் இவர் ஆற்றிய தொண்டு என இவரைப் பற்றிய வரலாற்றையே தெலுங்கு ஊடகங்கள் பேச தொடங்கி உள்ளனர். அதன் முதற்கட்டமாக சாக்ஷி என்ற தினசரி செய்தித்தாளில் தமிழிசை சௌந்தரராஜன் பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளது. அதனுடைய ஒரு பக்கத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.