தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தீவிர பணியாற்றி வந்தனர். அதேபோல், மாநிலங்களின் முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் உறக்கம் இல்லாமல் தொடர்ந்து பணியாற்றி வந்ததால் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. 

இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு  உடல்நலக்குறைவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து  ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை மற்றும் அவரது தற்போதைய உடல்நிலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனையடுத்து விரைவில் தெலங்கானா முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் முறைப்படி அறிக்கையாக வெளியிடும் என்று கூறப்படுகிறது.