10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கதக்கது என்றும் கல்வி ஆண்டினை 2 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் 
பி.கே. இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:   தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றால் மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கையாகக் கடந்த மார்ச் மாதம் முதல் மாணவர்களுக்கு அரசு பல்வேறு வகையில் ஆன்லைன் மற்றும் தொலைகாட்சி மூலம் கற்பதற்கு மாற்று ஏற்பாடு செய்தது வரவேற்புக்குரியது. 

இருப்பினும் நேரடி பயிற்சி மட்டுமே முழுமைப்பெறும். தற்போது கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்து எதிர்வரும் 19 ந்தேதி பள்ளிகள் திறக்கபடும் என்ற மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பு ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் அரசுப்பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு ஏற்கனவே பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கியுள்ள நிவையில், கூடுதலாக அனைவருக்கும் மறுசுழற்சிச்செய்யும் முககவசம் (Re-usable Mask) தேவைப்படும் அளவுக்கு வழங்கி உதவ தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றேன். 

மேலும் இவ்வளவு காலம் ஒருவிதமன அழுத்தத்திலிருந்த மாணவர்கள் அதிலிருந்து வெளிவந்து தன்னம்பிக்கையோடு படித்து தேர்வினை எதிர்கொள்ளும் வகையில்  குறைக்கப்படும் என அறிவிக்கபட்டப் பாடத்தினை உடனடியாக அறிவிக்கவும், இந்த கல்வியாண்டினை இரண்டு மாதங்கள் நீட்டித்து வழங்க ஆவனசெய்யவும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.