Asianet News TamilAsianet News Tamil

மாணவர்களுக்காக சாட்டை சுழற்றிய ஆசிரியர்கள்...!! அடங்கி ஒடுங்கிய அமைச்சர் ...!!

பொதுத்தேர்வென்று பள்ளியினைவிட்டு வேறுபள்ளிக்கு சென்று எழுதச்சொல்வது பயத்தை ஏற்படுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.
 

teachers association thanks giving to tamilnadu government for 5th and 8th standard public examination
Author
Chennai, First Published Feb 4, 2020, 4:42 PM IST

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று  பிஞ்சுகளின் சுதந்திரத்தைப் பறிக்கும்  5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வினை ரத்து செய்த தமிழக அரசுக்கு நன்றி என அச்சங்கம் தெரிவித்துள்ளது.  குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமைச்சட்டம் திருத்தம் 2019 ன்படி தொடக்கக்கல்வி இயக்குநர் பொதுக்கல்வி வாரியத்தலைவருமான பள்ளிக்கல்வி  இயக்குநரின் கடித அடிப்படையில் இந்த கல்வியாண்டிலேயே 5 மற்றும் 8 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கன செயல்முறைகளை தொடங்கியிருப்பது குழந்தைகளுக்கு எதிராகத் தொடுக்கும் வன்முறையாகவே கருதப்படுகிறது. ஆடல் பாடல் முறை விளையாட்டுமுறை கல்வி, கதைவழி  முறை கல்வி என குழந்தைநேய கல்விமுறைக்கு எதிராக குழந்தைகளை துன்புறுத்துவதாகும். 

teachers association thanks giving to tamilnadu government for 5th and 8th standard public examination

பள்ளிக்காக குழந்தைகள் இல்லாமல் குழந்தைக்காக பள்ளிகள் இருந்தால் ஆர்வத்தோடு பள்ளியினை நோக்கி குழந்தைகள் வருவார்கள்.
வீட்டுச்சூழல் போன்று பள்ளிச்சூழலும் அமைந்தால்தான் உண்மையான கல்வியாகும் என்று மகாத்மா காந்தியடிகள் குறிப்பிடுகிறார்கள்.
கற்றலில் இனிமை மாறி கஷ்டப்பட்டால்தான் இஷ்டம் வரும் என்றால் கல்வியினை கல்வியாக பார்க்காமல் கல்விச்சாலைகள் எல்லாம் தொழிற்சாலைகளாக மாறும். 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும்.
குறிப்பாக தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டப் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் குழந்தைகள்தான் அரசு பள்ளிகள் ,மாநகராட்சிப்பள்ளிகள் அரசுநிதி உதவிபெறும் பள்ளிகளில் பயின்றுவருகிறார்கள். குழந்தைகள் பள்ளிக்கு வரவழைப்பதே பல போராட்டங்கள் நடுவில் அழைத்துவருகிறோம். 

teachers association thanks giving to tamilnadu government for 5th and 8th standard public examination

இந்நிலையில் பொதுத்தேர்வென்றால் அரசுப்பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடிவிடும் அபாயத்திற்கு தள்ளப்படும். இது பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சுப்பாய்ச்சும். ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தும். பொதுத்தேர்வென்று பள்ளியினைவிட்டு வேறுபள்ளிக்கு சென்று எழுதச்சொல்வது பயத்தை ஏற்படுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே கல்விச்சீர்த்திருத்தம் என்ற பெயரில் குழந்தைகளின் மனநலத்தை கெடுக்கும் 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு  பொதுத்தேர்வினை ரத்துசெய்த  மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios