எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். அதன்படி நடைபெற விருக்கும் தேனி கூட்டத்தை ரத்து செய்து டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். 
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

சில நாட்களுக்கு முன்பு மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜெ ஜெவென கூட்டம் அலை மோதியது. இதில் மிகவும் மிரண்டு போன எடப்பாடி அணி விரைவில் அணிகளை இணைக்க வேண்டும் என விரும்பியது. 

நீண்ட நாள் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று அதிமுகவின் ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தன. பேச்சுவார்த்தைக்கு பிறகு தலைமை அலுவலகம் சென்ற ஒபிஎஸ் அங்கு எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து ஒன்றாக இணைந்ததாக அறிவித்தார். 

மேலும் அங்கு ஒபிஎஸ்க்கு துணை முதலமைச்சர் பதவியும், கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. மேலும் வைத்தியலிங்கம் துணை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் எனவும் முதலமைச்சர் எடப்பாடி அறிவித்தார். 

இதைதொடர்ந்து சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என வைத்தியலிங்கம் எம்.பி தெரிவித்தார். 
இந்நிலையில், சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என கூறிய வைத்தியலிங்கம் எம்.பியை கட்சியில் இருந்து நீக்கி டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தேனியில் நடக்கவிருந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தை ரத்து செய்து டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.