ஜெகத்ரட்சகன் நிறுவனத்தில் ரூ.1000 கோடி வரி ஏய்ப்பு? வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்

திமுக எம்பியும், மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் 1000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tax evasion of Rs 1000 crore has reportedly been found during the Income Tax raid at Jagadratsakan house KAK

ஜெகத்ரட்சகனை சுற்றி வளைக்கும் வருமான வரித்துறை

அதிமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர் ஜெகத்ரட்சகன் , பின்னர் ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சி நடத்தி வந்த நிலையில் திமுகவில் கடந்த 2008 ஆம் ஆண்டு இணைந்தார். இதனையடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சராகவும் இருந்தார். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, நட்சத்திர விடுதிகள் என பல தொழில்களை நடத்தி வரும் அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பல முறை வருமான வரித்துறையினர் சோதனை செய்து ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். 

Tax evasion of Rs 1000 crore has reportedly been found during the Income Tax raid at Jagadratsakan house KAK

5 நாட்களாக தொடரும் சோதனை

இந்தநிலையில் ஜெகத்ரட்சகன் நடத்தி வந்த அறக்கட்டளையின் வரி விலக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்ததாக உள்ள புகாரை அடுத்து வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 5 நாட்களாக  ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய கல்வி நிலையங்கள், மருத்துவமனை. நட்சத்திர விடுதி  உட்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.  

சென்னை அடையாறில் கஸ்தூரிபாய் நகரில் உள்ள ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அதன் அருகில் உள்ள பாரத் பல்கலைக்கழக அலுவலகத்திலும் தீவிர சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், வெளிநாட்டு கரன்சிகள், நகைகள் உட்பட பல முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். 

Tax evasion of Rs 1000 crore has reportedly been found during the Income Tax raid at Jagadratsakan house KAK

கட்டுக்கட்டாக சிக்கிய பணம், ஆவணங்கள்

சோதனையில் 4.5 கோடி ரூபாய் பணம் 2.7 கிலோ மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும்  ஜெகத்ரட்சகன் மகளின் வீட்டில் இருந்து வெளிநாட்டுக் கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மதிப்பு 2.45 கோடி ரூபாய் மதிப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும்  அந்த வீட்டில் இருந்து  கட்டுக் கட்டாக 2000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

6 வது நாளான இன்று ஜெகத்ரட்சகனுக்கு தொடர்பான பல இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் ரெய்டு முடிந்துவிட்ட நிலையில் சில இடங்களில் மட்டும் ரெய்டு தொடர்ந்து நடக்கிறது. இதனிடைய ஜெகத்ரட்சகன் நிறுவனத்தில் ரூ.1000 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios