Asianet News TamilAsianet News Tamil

டாஸ்மாக் மது விற்பனை... உயர்நீதிமன்ற நீதிபதி கிடுக்குப்பிடி கேள்வி..!

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மொத்தமாக மது வாங்கி சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களை கைது செய்யும் காவல்துறையினர், அவர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது ஏன் வழக்குபதிவு செய்வதில்லை? என மதுரைக்கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். 
 

Tasmag liquor sale ... High Court judge grabs question
Author
Tamil Nadu, First Published Sep 15, 2021, 6:03 PM IST

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மொத்தமாக மது வாங்கி சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களை கைது செய்யும் காவல்துறையினர், அவர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது ஏன் வழக்குபதிவு செய்வதில்லை? என மதுரைக்கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். Tasmag liquor sale ... High Court judge grabs question

மொத்தமாக மதுபாட்டில்களை பதுக்கி வைப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு மொத்தமாக டாஸ்மாக் கடைகளில் விற்கும் விற்பனையாளர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ஆய்வுசெய்து பலரை கைதுசெய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி பலர் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், "மனுதாரர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அரசின் மதுபானக் கடைகளில் இருந்து 500 மதுபாட்டில்கள், 300 மது பாட்டில்கள் என வாங்கி பதுக்கிவைத்து விற்பனை செய்கிறார்கள். ஆகையால் இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது" என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கருத்து தெரிவித்த நீதிபதி, ‘’ஒரு நபருக்கு 200, 300, 500 என மதுபாட்டில்களை அதிக அளவில் விற்பனை செய்தது யார்? Tasmag liquor sale ... High Court judge grabs question

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மொத்தமாக மது வாங்கி சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களை கைது செய்யும் காவல்துறையினர், அவர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது ஏன் வழக்குபதிவு செய்வதில்லை? மொத்தமாக விற்பனை செய்வதும் சட்டவிரோதம் தானே? ஏன் விற்பனையாளர்மீது வழக்குபதிந்து கைது செய்யவில்லை. வழக்கின் அடுத்த விசாரணையின்போது இது சம்பந்தமான முழு தகவலையும் காவல்துறையினர் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

Follow Us:
Download App:
  • android
  • ios