கோரோனா குரூரத்தால் ஊரடங்கு போடப்பாட்டு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் குடிமகன்களின் நிலை பரிதாபமாகி வருகிறது. போதைக்காக சிலர் மாற்று வழிகளை தேடி வரும் அதே வேளையில், பாதை மாறி நல்வழிக்கு திரும்பி வருகின்றனர் பலரும். இந்நிலையில், அப்படியே டாஸ்மாக் கடைகளை அடைத்து விட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதியை அளித்து வெற்றிபெற்று முதலமைச்சர் ஆனார் ஜெயலலிதா. ஆனால் அவர் இருக்கும் காலம் வரையும் சரி, அதற்கு பிறகான எடப்பாடி பழனிசாமி தலையிலான ஆட்சியிலும் சரி மது விலக்கு என்பது தேர்தல் வாக்குறுதியாக தேங்கி நிற்கிறது. 

2016 ஜெயலலிதா எடுத்த அதே மதுவிலக்கை கையில் எடுத்து மீண்டும் 2021லும் ஆட்சியை பிடிக்க திட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் அதிமுக முக்கியப் புள்ளிகள். குடிமகன்களின் தாக வெறியை கொரோனா ஒரு வழியாக கட்டுப்படுத்தி விட்டது. ஒரு மாதமாக தாக சாந்தியை பெரும்பாலானவர்கள் அடக்கிக் கொண்டு விட்டனர். ஆகையால் இது தான் சந்தர்ப்பம். அடுத்து தேர்தலும் வரப்போகிறது. இப்படியே டாஸ்மாக்கை பூட்டிவிட்டால் அது வேறு வகையிலான தாக்கங்களை ஏற்படுத்தாது. தற்போது ஒட்டு மொத்த டாஸ்மாக் கடைகளையும் இழுத்து பூட்டி விட்டு தமிழக மக்கள் மத்தியில் பேராதரவை பெறலாம் என்கிற திட்டத்தை கையிலெடுத்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. 

அரசின் முக்கிய வருமானமே டாஸ்மாக்தான்? பிறகு எப்படி பூட்டுவார்கள் என கேள்வி எழுப்புவர்களின் வாயயை அடைக்கும் வகையில் அதற்கும் பதிலடி திட்டத்தை உருவாக்கி விட்டாராம் எடப்பாடி. அரசின் வருமானத்திற்கு மாற்று ஏற்பாடுகளுக்கு குறித்து சமீபத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார் முதல்வர் பழனிச்சாமி. 

’’தனியார் மருத்துவமனை, பள்ளிகள், கல்லூரி போன்றவற்றில் 30 சதவிகித பங்குகளை அரசுடமையாக்க திட்டமிட்டுள்ளார். இது மதுபான விற்பனை வருமானத்தை விட 3 மடங்கு அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளதால், டாஸ்மாக் கடைகளை மூட தயார் நிலையில் இமுடிவெடுத்து விட்டார் பழனிச்சாமி. இந்த தகவல்  திமுக தலைமைக்கு செல்ல, இது நடந்தால் தமிழக மக்கள் பேராதரவை பெற்று விடுவார் எடப்பாடி பழனிசாமி என்று அதிர்ச்சியில் உறைந்துள்னர் கழக உடன்பிறப்புகள். 

இந்நிலையில் எடப்பாடியின் இந்த வியூகத்தை திமுகவிற்கு சாதகமாக மாற்ற முடிவெடுத்து ஊரடங்கு உத்தரவு முடிந்த உடன் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளதாகவும் அறிவாலய வட்டாரம் அலாரம் அடிக்கிறது. மதுபான ஆலைகள் பெரும்பாலும் திமுக புள்ளிகள், சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமானது. தற்போது டாஸ்மாக் கடைகள் இழுத்து மூடப்பட்டால் திமுக தலைவர்களின் வருமானம் பெருமளவில் பாதிக்கப்படும். தமிழகத்தில் பள்ளி, கல்லுரி மற்றும் மருத்துவமனைகள் பெரும்பாலும் திமுகவினருக்கு சொந்தமானது. அங்கே இருந்து 30 சதவிகித வருமானத்தை அரசு எடுக்க இருப்பதால் திமுகவினருக்கு பலத்த இழப்புகள் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.