Asianet News TamilAsianet News Tamil

இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு ‘கடை’ இல்லை பாஸ்...

தமிழகத்தில் இடைத்தேர்தல் மற்றும் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, டாஸ்மாக் கடைகளை மூட  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். நேற்று ஸ்டாக் வாங்கி வைக்காதவர்கள் நெஞ்சைப்பிடிக்கவேண்டாம் இது ஜஸ்ட் இடைத்தேர்தல் நடக்கும் அந்த 4 தொகுதிகளுக்கு மட்டுமான அறிவிப்பே.

tasmac closed for 3 days in bye election areas
Author
Aravakurichi, First Published May 17, 2019, 3:33 PM IST

தமிழகத்தில் இடைத்தேர்தல் மற்றும் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, டாஸ்மாக் கடைகளை மூட  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். நேற்று ஸ்டாக் வாங்கி வைக்காதவர்கள் நெஞ்சைப்பிடிக்கவேண்டாம் இது ஜஸ்ட் இடைத்தேர்தல் நடக்கும் அந்த 4 தொகுதிகளுக்கு மட்டுமான அறிவிப்பே.tasmac closed for 3 days in bye election areas

அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதே நாளில், தமிழகத்தில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படவுள்ளது. tasmac closed for 3 days in bye election areas

இதையடுத்து, 4 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள 13 வாக்குச்சாவடிகள் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இன்று மாலை முதல் மே 19 -ஆம் தேதி இரவு வரை, மூன்று தினங்களுக்கு இப்பகுதிகளில் டாஸ்மாக்  கடைகள் இயங்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஓட்டுக்காக வாங்கிய பணத்தை ஸ்டாக் வைப்பதற்காக மட்டுமே செலவழிக்கவேண்டியுள்ளதே என்று குடிமகன்கள் புலம்புகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios