வருமான வரித்துறையினர் நடிகர் ரஜினிக்கு ஒரு நிலைப்பாடும், விஜய்க்கு ஒரு நிலைப்பாடும் எடுக்கிறார்கள் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேல்முருகன்;- ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிராக தர்மபுரி மாவட்டம், சிவாடியில் பெட்ரோல் கிடங்கு அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். 

இதையும் படிங்க;-  உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டியே முருகா... நெல்லைக் கண்ணனை வீட்டுக்கே போய் சந்தித்த வேல்முருகன்..!

சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக ஆளுநர் அனுப்பி 500 நாட்கள் ஆகியும் இதுவரை அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து தமிழக அரசு மீண்டும், சட்டப்பேவையில் மேலும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் அரசு அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க;- துப்புகெட்ட, அறிவுகெட்ட அரசே... இஸ்லாமியருக்கு முட்டுக்கொடுத்து மாமிகளை இடித்துரைத்த வேல்முருகன்..!

மேலும், பேசிய அவர் வருமான வரித்துறையினர் நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஒரு நிலைப்பாடும், விஜய்க்கு ஒரு நிலைப்பாடும் எடுக்கிறார்கள். இந்த விஷயத்தில் நடிகர் விஜய்க்கு எங்கள் கட்சியினர் ஆதரவாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.