2016-ம் ஆண்டில் கனமழை பெய்த போது இந்திய நாட்டில் ராணுவம் வருவதற்கு முன்பாக என் இஸ்லாமிய இராணும் படை வந்துதான் சென்னையில் 10 மாடி கட்டிடத்தில் மாட்டிக்கொண்ட இருந்த மாமி கூட்டத்தை தோளில் சுமந்த கூட்டம் எங்கள் கூட்டம் என வேல்முருகன் ஆவேசமாக பேசினார். 

நெல்லையில் குடியரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் "அருகம்புல் கூட்டமே, மயிலாப்பூர் கூட்டமே உன்னிடத்தில் என்னடா இருக்கிறது. அட கொப்ப மவன நீ இந்திய நாட்டில் சுதந்திர கொடியை செங்கோட்டையில் ஏற்றுகிறாய். அந்த கொடியை அடித்து வடிவமைத்து கொடுத்து, வரைபடம் அமைத்து கொடுத்தவன் என்னுடைய இஸ்லாமிய சகோதர, சசோதரிகள். இந்தியாவில் அதிசயங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய தாஜ்மாஹலை என்னுடைய முன்னோர் கட்டி வைத்துள்ளனர். இந்தியாவில் பிரிட்டிஷ் படையை ஓட ஓட விரட்டி அடித்த பெருமையை கொண்டவர் இந்த இஸ்லாமியர்கள். 

இந்தியா வல்லரசாக மாறுவதற்காக நீ எக்கரணமிட்டு குதிக்கிறாயே உலக நாடுகளே இன்றைக்கு மூக்கின் மீது விரல் வைக்கும் அளவிற்கு எங்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்த அப்துல்கலாமே எங்களுடைய இஸ்லாமிய சகோதரர் தான். உலக அரங்கில் உனக்கு என்று ஒரு சமூக அந்தஸ்தை உயர்த்தி கொடுத்தவன். பெசன் நகரில் காயத்திரி உள்ளிட்ட 6 இந்து பெண்கள் வாசலில் கோலம் போட்டதால் கைது செய்கின்ற மானங்கேட்ட, தூப்புகெட்ட, அறிவுகேட்ட அரசே. நேற்று 6 பேர் கோலம் போட்டதற்காக கைது செய்தே அரசே இப்போது 6 கோடி பேர் கோலம் போடுவதற்கு வாய்ப்பளித்த தமிழக காவல் துறைக்கும் அடிமை எடப்பாடிக்கும் நன்றி டா.

தமிழகத்தில் 40 இடங்களில் ஒரு இடம்கூட இல்லாமல் உங்களை தொடச்சி துப்பன ஊருடா தமிழ்நாடு. எல்லா இடத்திலும் ஓட்டு மிஷினில் வேலை பண்ணிங்க, ஆனால், தமிழ்நாட்டு செய்ய முடிஞ்சுதா. எங்கள் இந்திய நாட்டில் ராணுவம் வருவதற்கு முன்பாக என் இஸ்லாமிய இராணும் படை வந்துதான் சென்னையில் 10 மாடி கட்டிடத்தில் மாட்டிக்கொண்ட இருந்த மாமி கூட்டத்தை தோளில் சுமந்த கூட்டம். வந்தே மாதரம் என்ற பாடல் இசையின் மூலமாக உலக முழுவதும் கொண்டு சேர்ந்த எங்கள் ரகுமான் என்ற இஸ்லாமியன் உனக்கு இனிக்குது, அப்துல்கலாம் உனக்கு இனிக்குது. ஐஐடியில் உள்ள 750 பேராசிரியர்கள் பூணம் கூட்டங்களே நீங்களே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள் என வேல்முருகன் நெல்லை கண்ணணை விட கடுமையாக விமர்சித்துள்ளார்.