குழந்தை சுர்ஜித்தின் மரணத்துக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை இரங்கல் தெரிவித்துள்ளார்.


குழந்தை சுர்ஜித்தின் மரணத்துக்கு தலைவர்கள் இரங்கலை தெரிவித்துவருகிறார்கள். குழந்தை மரணம் தொடர்பாக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தத்தையடுத்து மீட்பு பணிகளைப் பற்றி கேட்டறிந்து தமிழிசை, குழந்தை மீட்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சுர்ஜித் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், “சுர்ஜித் மரணம் வேதனைஅளிக்கிறது. உலகிற்கு இறந்து பாடம் கற்பித்துள்ளான். கண்ணீர்அஞ்சலி” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.