தமிழர்கள் உங்களின் மலிவான அரசியலை புரிந்து கொண்டுவிட்டார்கள்! திமுக கூட்டணி கட்சிகளை விளாசும் இந்து முன்னணி.!
பண்டிட் தீனதயாள் அவர்களின் கருத்துரை தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் மேதகு தமிழக கவர்னர் பேசிய கருத்துக்கு தமிழக அமைச்சர் பொன்முடி, சிறுபான்மை வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மற்றும் திமுகவில் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
தோற்றுபோன சிந்தாந்தத்தை அடிமை புத்தியால் ஆதரித்து கவர்னரை விமர்சித்து வருகின்ற ஆங்கிலேயே காலனி ஆதிக்க ஆதரவு ஏன்? காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சமீபத்தில் ஜனசங்கத்தின் தலைவராக இருந்த பண்டிட் தீனதயாள் அவர்களின் கருத்துரை தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் மேதகு தமிழக கவர்னர் பேசிய கருத்துக்கு தமிழக அமைச்சர் பொன்முடி, சிறுபான்மை வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மற்றும் திமுகவில் சிலர் விமர்சித்து வருகின்றனர். கவர்னர் ரவி அவர்கள் தெரிவித்த கருத்தை விமர்சிப்பவர்களது எண்ணம் ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தை ஆதரிக்கும் வகையில் இருக்கிறது.
இதையும் படிங்க;- அமைச்சர் செந்தில் பாலாஜி தான் ஸ்டாலினுக்கு ஆப்பு வைக்க போகிறார்.. போட்டு தாக்கும் எடப்பாடி பழனிசாமி.!
இதில் உள்ள ஆபத்தை தமிழர்கள் உணர வேண்டும். தமிழக கவர்னர் காலனி ஆதிக்கத்தின் அடிமை புத்திக்கு மூன்று உதாரணங்களை கூறினார். கார்ல் மார்க்ஸ் தத்துவம், ஜனநாயகம் பற்றி ஆபிரகாம் லிங்கன் கூறியது, டார்வின் பரிணாம வளர்ச்சி. இவைகளை விட இந்திய எடுத்துக்காட்டு சிறந்தது என்று தெரிவித்தார். ஆனால் இந்திய பெருமைகளை அடிமை புத்தி உடையவர்கள் புறந்தள்ளியே பேசி வருகின்றனர். உதாரணமாக இந்தியா குடியரசு நாடாக அறிவித்த நாளில் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை என்பதை நிறைவேற்றியது. பாகுபாடு அற்ற இந்த புரட்சி வேறு எந்த நாட்டிலும் இல்லை.
அமெரிக்கா உட்பட பல நாட்டில் பெண்களுக்கும், கருப்பினத்தினருக்கும் ஓட்டுரிமை மறுக்கப்பட்டே வந்துள்ளது. மகாத்மா காந்தி பாரத நாட்டிற்கு ஏற்ற கொள்கை கம்யூனிசமோ, முதலாளித்துவ கொள்கையோ அல்ல இராமராஜ்யமே என அறிவித்தார். நமது துரதிர்ஷ்டம் காங்கிரஸ் ஆட்சியாளர்கள், காந்தியின் கொள்கையை விடுத்து கம்யூனிச சோஷலிச பாதையில் நாட்டை இழுத்து சென்றதுதான். இதுதான் காலனி அடிமை புத்தி ஆகும். இதற்கு மாற்றாகத்தான் பண்டிட் தீனதயாள் அவர்கள் ஏகாத்மமானவாதம் எனும் சுதேசி கொள்கையை முன்னிறுத்தினார். அதுவே சுயசார்பு கொள்கை. இந்த கோட்பாடு சனாதன தர்மத்தின் வசுதைவ குடும்பகம் எனும் யாதும் ஊரே யாவரும் கேளீர் என தமிழக ஆளுநர் தமது உரையில் எடுத்துக்காட்டினார்.
இதையும் படிங்க;- இபிஎஸ்ஐ ஓவர் டேக் செய்த ஓபிஎஸ்.. பொதுக்குழு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு பறந்த கடிதம்..!
பீட்டர் அல்போன்ஸ், வீரமணி, கம்யூனிஸ்ட் முத்தரசன் போன்றோர் இன்னமும் தோற்றுபோன சிந்தாந்தத்தை அடிமை புத்தியால் ஆதரித்து கவர்னரை விமர்சித்து வருகின்றனர். தமிழர்கள் இவர்களின் மலிவான அரசியலை புரிந்து கொண்டுவிட்டார்கள். நமது நாடு சுயசார்பு கொள்கையில் வளர்ச்சியைக் கண்டு வருகிறது என்பதைக் கண்கூடாக காண்கிறோம். எனவே இவர்கள் வெற்று அரசியல் பேச்சுக்களை தமிழக இளைஞர்கள் புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான கருத்துக்களை ஆதரிக்க கேட்டு கொள்கிறோம் என காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.