மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 385 கட்டுப்பாட்டு பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது ,  அதில் தமிழகம் முழுவதும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர 14 மாநகராட்சிகள் , 121 நகராட்சிகள் , 528 பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஏப்ரல் -19 ஆம்  தேதி வரை , சுமார் 789 கட்டுப்பாட்டு அறைகளும்  3 லட்சத்து  203  களப்பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் பணியில் உள்ளனர் . 

மேலும் 20,071 கைத்தெளிப்பான்கள் ,   2,536 வாகனத்தில்  பொருத்தப்பட்ட தெளிப்பான்கள் ,  8462 மிஸ்ட் புளோயர்கள்,  4.29 லட்சம் மூகக் கவசங்கள் 14. 88 லட்சம் கையுறைகள் , 1.34 இலட்சம் முழு கவச உடைகள்  ,  1.47 லட்சம் லிட்டர் கைகளை சுத்தமாக்கும் கிருமிநாசினிகள் , 84.523 லிட்டர் கைகழுவும் சொல்யூஷன் ,  202  லட்சம் லிட்டர் சோப்பு கரைசல்கள் ,  51.28 லட்சம் லிட்டர் சோடியம் ஹைப்ரோ குளோரைட் சொல்யூஷன் ,  9 .90 லட்சம் லிட்டர் லைசால் கரைசல் கிருமிநாசினிகள் ,  6.859 மெட்ரிக் டன் பிளீச்சிங் பவுடர் போன்ற தூய்மை பணிகள் மேற்கொள்ள தேவையான பொருட்களும் ,  243 ஜட்டிராக் எந்திரங்கள் உட்பட  420 வாகனங்களும் ,  கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காக பயன்பாட்டில் உள்ளன .  இந்த பணிகளுக்கு இதுவரை 173.68 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் உள்ள பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அந்த பகுதியில் யாரும் வெளியே செல்லாத வண்ணம் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன. 

அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி 112 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 273 கட்டுப்பாட்டுப் பகுதிகள் என மொத்தம்  385 கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன . இந்த பகுதிகளில் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன . இந்த பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு தேவையான பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதை அலுவலர்கள் கண்காணித்து உதவி செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது .  அதேபோல் நாள் தோறும் மாநகராட்சி மருத்துவக் குழுவினர் சென்று சளி இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் உள்ளனவா என ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர் . மேலும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 20,19 ,711 வீடுகளிலும் பொதுமக்களுக்கு சளி இருமல் மற்றும் காய்ச்சலை ஏதேனும் அருகிலுள்ள உள்ளதா என மாநகராட்சி பணியாளர்களைக் கொண்டு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது . 

மாநகராட்சி சார்பில் 15 ஆயிரம் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர் இந்நிலையில் ரோபிட் டெஸ்டுக்கு கருவிகள் கொண்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சளி இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் உள்ள நபர்கள், நோய்  தொட்டு தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ,  அலுவலர்கள் , மருத்துவர்கள் , செவிலியர்கள் ,  காவலர்கள் மற்றும் பத்திரிக்கை துறையை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . அதேநேரத்தில் நோய்த் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மற்றும் ஊடகத் துறையினர் அனைவரும் பாதுகாப்பு வழிமுறைகளை பின் பற்றி கவனத்துடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.