தமிழக அரசின் சார்பில் ஆயிரம் ரூபாய் தொகையுடன்  கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு ,  ரேஷன் கடைகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது .  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது .   அதிமுக அரசு பொறுப்பேற்றுக் கொண்டது முதல் பொங்கல் பரிசுடன் ரொக்கம்  பணமும் வழங்கப்படுகிறது.   

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த நவம்பர் மாதம் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார் .  குடும்ப அட்டைதாரர்களுக்கு  ஒரு கிலோ பச்சரிசி சர்க்கரை ,  கரும்பு 20 கிராம் , முந்திரி 20 கிராம் ,  உலர் திராட்சை ,  ஏலக்காய் 5 கிராம் ,  உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்றது .  அத்துடன் 1000 ரூபாய் தொகையும் வழங்கப்படுகிறது .  இந்த பொங்கல் பரிசு தொகுப்பை இன்று முதல்  நியாயவிலைக் கடைகள் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது .  இன்று முதல் இந்த பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்படுகிறது. 

வரும் 12ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை குடும்ப அட்டைதாரர்கள்   பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.   விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் 13ம்தேதி பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .  அரசின் இந்த அறிவிப்பால் நியாயவிலைக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது .  பொங்கல் பரிசு வழங்கப்படுவதால் நியாயவிலை கடைகளுக்கு  விடுமுறை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.