பிகில் படத்துக்குப் பிறகு ரெய்டில் சிக்கியிருக்கிறார். வ.வ.துறைக்கு அப்படி என்னதான் காண்டோ தெரியலை இந்த முறை விஜய்யை வெச்சு செய்து கொண்டிருக்கின்றனர். அதிலும் நெய்வேலியில் இருந்து அவரை தங்களின் வாகனத்தில் தூக்கி வந்ததெல்லாம் உச்சகட்ட அவமானம் தான் ஜோசப் விஜய்க்கு. வரி ஏய்ப்பு செய்தாரா விஜய்? நடிகர் விஜய் சொத்துக்களில் வருமான வரித்துறையினர் கிடுக்கிப்பிடி ரெய்டு! ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சம்மன் கொடுக்கப்பட்டு, மடக்கப்பட்ட விஜய்! ரெய்டு எதிரொலி, பாதியிலேயே முடங்கியது விஜய்யின்  படப்பிடிப்பு!...என்று மீடியாக்கள் வெச்சு வெளுத்தனர் தளபதியை. அதெல்லாம் கூட அவரை பெரிதாய் நோகடிக்கவில்லை. 

ஆனால் தன் மீது ரெய்டு புலி பாய்ந்த நொடியில் துவங்கி இணையதளத்தில் தன்னை  பீஸ் பீஸாக கிழித்துக் கொண்டிருக்கும் தல ரசிகர்களின் ரவுசுதான் அவரை ஏகத்துக்கும் காயப்படுத்திவிட்டது. இப்படித்தான் என்றில்லாமல், வகை தொகையே இல்லாமல் விஜய்யை நார் நாராக கிழித்து தோரணம் கட்டிக் கொண்டுள்ளனர்  அஜித்தின் ரசிகர்கள். என்ன காண்டோ தெரியவில்லை, ரஜினியின் ரசிகர்களும் இதில் இணைந்துள்ளனர். சோஷியல் மீடியாவெங்குமே விஜய்க்கு எதிரான யுத்தம்தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த போர் துவங்கி இருபது மணி நேரம்தான் ஆகியிருக்கும். அதற்குள் இந்த தாக்குதலில் இருந்து விஜய்யை அலேக்காக எஸ்கேப் பண்ணிவிட்டார் தமிழக அமைச்சர் ஒருவர். ’மை இமேஜ் டோட்டல் டேமேஜ்’ என்று விசும்பிக் கொண்டிருந்த விஜய்யே, பிகில் அடித்து குஷியாக்கும் வண்ணம் கை கொடுத்திருக்கிறார் அந்த அமைச்சர். அவர் வேறு யாருமில்லை, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல்லார் தான். 

நீலகிரி மாவட்டம் முதுமலையில் வனத்துறை விழாவுக்கு சென்ற இடத்தில், பழங்குடியின சிறுவர்களை அழைத்து தன் செருப்புகளை அவர் கழற்றிவிட வைத்த விவகாரம், வீடியோ செய்யப்பட்டு தேசமெங்கும் பெரும் வைரலாகி நிற்கிறது. நீலகிரி மண்ணின் பூர்வகுடி மனிதர்களான பழங்குடியின குழந்தைகளை தன் செருப்பை கழட்டிவிட வைத்து அசிங்கப்படுத்தி, அலங்கோலம் செய்துவிட்டார்.  பழங்குடி மக்கள் இனத்தையே அசிங்கப்படுத்திவிட்டார்! என்று பெரும் எதிர்ப்புகளும், கொந்தளிப்புகளும் எழுந்துள்ளன. ஆக இப்படி இன்று பிற்பகலில் இருந்து  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிரான பிரச்னைகள் வைரலாக துவங்கியதால், விஜய் பற்றிய செய்திகள் வெகுவாக குறைய துவங்கின. தளபதியின் இமேஜை தகர அடியாக அடித்து நொறுக்கி தல ரசிகர்கள் போட்ட பதிவுகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போயின. விஜய்க்கு எதிரான விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் குறைந்து, அமைச்சருக்கு எதிரான விமர்சனங்கள் டிரெண்டிங்கில் வந்துள்ளன. இது விஜய்யின் கவனத்துக்குப் போக, அவரோ ‘சீனிண்ணா! தேங்ஸ்ணா! தேங்ஸ்ணா!’ என்று மனதில் குஷியாக நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். 
அவ்வ்வ்!............