மாணவிகள் போன்று மாணவர்களுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் - உதயகுமார் கோரிக்கை

அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரி படிப்பைத் தொடரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுவதைப் போன்று மாணவர்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

tamilnadu government should avoid inequality gender ratio in students schemes says rb udhayakumar

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த அறிக்கையில் “மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடியார் திமுக அமைச்சர்கள் மக்கள் வேதனைப்படும் வகையில், அவர்கள் கண்ணீரை துடைப்பதற்கு பதிலாக, கண்ணீரை வரவழைக்கும் வார்த்தைகளை மக்களிடத்தில் பேசி வருகிறார்கள் என்று எடுத்துரைத்தார். 

குறிப்பாக அமைச்சர் பொன்முடி தாய்மார்களை கொச்சைப்படுத்தும் வகையில், ஓசி பயணம் என்று இழிவுபடுத்தும் வகையில் பேசியதை எடப்பாடியார் மக்களுக்கு சுட்டிக்காட்டினார்,

அதே போல் அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவை பேச்சு என்ற பெயரில், மக்களை வேதனை படுத்தி உள்ளார். குறிப்பாக  மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது, பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை கொடுக்க சில்லரை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று நக்கலாக பேசியுள்ளார்,

இலவச பயணத்தை பெண்கள் புறக்கணிக்க வேண்டும் - பிரேமலதா கோரிக்கை

மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு, மாணவர்களுக்கு கொடுக்காமல் பாரபட்சம் காட்டக்கூடாது. இரண்டு பாலினத்தையும் பாகுபாடு இன்றி கொடுக்க வேண்டும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சைக்கிள் திட்டத்தை முதன் முதலில் ஆதிதிராவிடமக்களுக்கு கொண்டு வந்தார், அதனை தொடர்ந்து அனைத்து மாணவிகள் மாணவர்களுக்கும் பாகுபாடு இன்றி வழங்கினார்.

தாலிக்கு தங்கம் திட்டம் பெண்களுக்கு வழங்கப்பட்டது, அதனை தொடர்ந்து உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் ஆண்களுக்கும் திருமண உதவி தொகை திட்டத்தை அம்மா ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆகவே விடியா திமுக அரசு ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மற்றோரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கக்கூடாது. மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

அதேபோல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா இந்துக்களை இழிவாக பேசியுள்ளார், இதை முதலமைச்சர் இதுவரை கண்டிக்கவில்லை, அதேபோல் நிதி அமைச்சர் திட்டங்களைப் பற்றி கேட்டால் நாங்கள் என்ன தேதியா சொன்னோம் என்று  ஏகத்தாளமாக பதில் கூறுகிறார்.

சென்னை மாநகராட்சியில் ரூ.945 கோடி வரி வசூல்; கடந்த ஆண்டை விட 345 கோடி கூடுதல் வசூல்

அமைச்சர் ராஜ கண்ணப்பன் பட்டியல் இன மக்களை பேசிய சர்ச்சையில் தற்போது இலாகா மாற்றப்பட்டுள்ளது, திமுக 505 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சி எடுக்கவில்லை, ஆனால் மக்களை ஏளனத்துடன்  பேசி வருகிறார்கள், திட்டங்களை கொடுத்து மக்களை வாழவைக்கத்தான் அதிகாரத்தை மக்கள் உங்களுக்கு கொடுத்துள்ளார்கள். ஆனால் மக்களை நீங்கள் ஏகத்தாளமாக பேசுகிறீர்கள். 

இன்றைக்கு முதலமைச்சர் கட்டுப்பாட்டில் அமைச்சர்கள் உள்ளார்களா என்று கேள்வி? எழுந்துள்ளது குறிப்பாக தலைமை செயலகத்திற்கு அமைச்சர்கள் செல்கிறார்களா? என்று தெரியவில்லை இதைத்தான் எடப்பாடியார் கூறியுள்ளார்.

தென் மாவட்டத்திற்கு எடப்பாடியார் வந்த பொழுது மக்கள் திரண்டு வரவேற்றனர், மீண்டும் எப்போது முதலமைச்சராக வருவார் என்று மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

தொடர்ந்து மக்களை அமைச்சர்கள் விமர்சித்து வருகின்றனர், ஆனால் இதுவரை முதலமைச்சர் மௌனம் விரதம் இருந்து வருகிறார், ஆகவே முதலமைச்சர் கட்டுப்பாட்டு வளையத்தில் அமைச்சர்கள் உள்ளார்களா?” என்று தெரியவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios