tamilnadu government decides to appeal in banner case
கட் அவுட்கள் மற்றும் பேனர்கள் வைப்பதற்கு உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திரிலோக்ஷன குமாரி என்ற பெண், அவரது வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றக்கோரி வழக்கு தொடுத்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த பெண் வீட்டின் முன் இருந்த பேனர்களை அகற்ற உத்தரவிட்டது. மேலும் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களோ உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட்களோ வைக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது. பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக பேனர்கள் கட் அவுட்கள் வைக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது.
பேனர் வைத்து மட்டுமே தங்களை விளம்பரத்திக்கொண்ட ஆட்சியாளர்களால் நீதிமன்ற உத்தரவை ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை. அதுமட்டுமல்லாமல் தற்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருவதால் பேனர்கள் வைப்பதை ஆட்சியாளர்களால் தவிர்க்க முடியவில்லை.
எனவே உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தலைமை நீதிபதி முன் முறையிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
