தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல்  சீனிவாசனின் மனைவி  கண்ணாத்தாள் இன்று காலை திடீர் உடல்நலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 67  மனைவியின் மறைவு செய்தியைக் கேட்டதையடுத்து  சென்னையிலிருந்த அமைச்சர் சீனிவாசன்  கார் மூலம் திண்டுக்கல் விரைந்துள்ளார் . அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த அரசியல் தலைவரும்  தமிழக வனத்துறை அமைச்சருமாக இருந்து வருகிறார் திண்டுக்கல் சீனிவாசன் ,  தற்போதுள்ள அரசியல்வாதிகளில் மிகவும் யதார்த்தமாகவும் எளிமையாகவும் பழகக்கூடியவர் என பெயரெடுத்தவர் ஆவார் . ஆனால்  சமீபகாலமாக  இவர்  எதார்த்தமாக பேசும் பேச்சுக்கள் கூட சர்ச்சையில்  சிக்குவது வழக்கமாகி வருகிறது. 

ஆனாலும்  உள்ளூர் மக்களின் செல்வாக்குடன் அதிமுகவில் தவிர்க்கமுடியாத அரசியல்வாதியான வலம்வரும் திண்டுக்கல்  சீனிவாசனுக்கு இரண்டு மனைவிகள் அதில் முதல் மனைவியான கண்ணாத்தாள்தான் தற்போது உயிரிழந்துள்ளார், தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஐந்து மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர் . இதில் மூத்த மகன் ராஜ்மோகன் திண்டுக்கல்லில் உள்ள ஆர்.எம்.காலனியிலும் , இரண்டாவது மகன் வெங்கடேசன் போடி நாயக்கன் பட்டியிலும் வசித்து வருகின்றனர் ,  இந்நிலையில் மூத்த மகன்  ராஜ்மோகன் முழு நேர அரசியல்வாதியாகவும், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவராகவும் இருந்து வருகிறார். வெங்கடேசனும் முழு நேரமாக அரசியல் பணியில் ஈடுபட்டு வருகிறார், இவர்கள் இருவரும்  மறைந்த கண்ணாத்தாளின் மகன்கள் ஆவர். 

இந்நிலையில் குடும்பத்தில்  ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக  கண்ணாத்தாள்  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் பிரிந்து இருந்ததாக கூறப்படுகிறது,   திண்டுக்கல் போடிநாயக்கன்பட்டியில்  உள்ள தனது மகன் வெங்கடேசன் இல்லத்தில் கண்ணாத்தாள்  இருந்து வந்த நிலையில இன்று காலை திடீர் உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்துள்ளார்.  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கொரோனா தொடர்பான அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள சொன்னையில் தங்கியிருந்த நிலையில்  மனைவியின் மறைவு செய்தியை கேட்டு அவர் சென்னையிலிருந்து  கார் மூலம் திண்டுக்கல் விரைந்துள்ளார்,  இந்நிலையில் கண்ணாத்தாவின் உடல் இன்று மாலை ஆர் எம் காலனி மின்மயானத்தில்  தகனம் செய்யப்பட உள்ளது.