எந்த நிலையிலும், எந்த வடிவிலும் இந்தியை தமிழ்நாடு ஏற்காது, இதுதான் அரசின் கொள்கை என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

  

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில்;- மொழி விஷயத்தில் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். நீட் தேர்வு தோல்வியால் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. தற்கொலை என்பது நிரந்தர தீர்வல்ல. 

மேலும் அவர் பேசுகையில் தமிழகத்தில் இருமொழிக்கொள்கைதான் இருக்கும். இதில் இருந்து பின்வாங்க மாட்டோம். இந்தியை எந்த வடிவத்திலும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது. இதுதான் அரசின் கொள்கை என்று கூறிய அவர், இந்தி தொடர்பான சர்ச்சையை தவிர்ப்பதற்காகவே ட்விட்டரில் பதிவிட்ட கருத்தை முதல்வர் நீக்கினார். முதல்வர் கூறிய கருத்து அரசியலாக்கப்பட்டுள்ளது. தமிழ் பிற மாநிலங்களிலும் ஒலிக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் முதல்வர் அவ்வாறு ட்வீட் செய்தார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.