ரணகளத்திலும் குதூகலம்..! எடப்பாடிக்கு சேலஞ்சு விடும் ஸ்டாலின்..!
வயதாக வயதாக இளமையான லுக்கிற்கு ஹேர்ஸ்டைலை மாற்றி மாட்டிக் கொண்டு, பேண்ட் & டி-ஷர்ட் போட்டுக்கொண்டு கேஷுவல் லுக்கில் இளமையாக காட்டிக் கொள்ள ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்போர்ட்ஸ் பைக்கில் கருப்பு சிவப்பு உடை அணிந்து கெத்தாக கொடுத்த போஸ் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது இளம் வயதில் எடப்பாடி பழனிசாமி புல்லட் பைக்கில் எடுத்துக் கொண்ட போட்டோவுக்கு சேலஞ்ச் விடும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் 1970கள் மற்றும் 1980களின் தொடக்கத்தில் மிகவும் இளமையாகவும், துடிப்புடனும் காணப்பட்டார். அப்போது அவருக்கு ஆஃப்ரோ ஸ்டைலில் நீண்ட முடி, மீசை, இளமை ததும்பும் முகம் இருந்தது. சென்னை மேயராக இருந்தபோது, திமுக இளைஞர் அணி தலைவராக இருந்தபோது (பாடி லாஸாக இருந்நாலும்) மாஸ் தோற்றத்தில் இருந்தார். மு.க.ஸ்டாலினின் ஸ்டைல் பெரும்பாலும் எளிமை தன்மையுடன் திராவிட இயக்க பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. தளபதி என்று அழைக்கப்படும் அவர், பொதுவாக கருப்பு-வெள்ளை கலவையில் உடை அணிவதை விரும்புபவர்.
வயதாக வயதாக இளமையான லுக்கிற்கு ஹேர்ஸ்டைலை மாற்றி மாட்டிக் கொண்டு, பேண்ட் & டி-ஷர்ட் போட்டுக்கொண்டு கேஷுவல் லுக்கில் இளமையாக காட்டிக் கொள்ள ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார். சில சமயங்களில் சனிக்கிழமைகளை கருப்பு உடை அணிவது (சனி தோஷம் தவிர்க்க) அவரது வழக்கம்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் 1300cc Suzuki Hayabusa (GSX1300R) ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்கில் அமர்ந்து போஸ் கொடுத்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. இது தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புல்லட் பைக்கில் இளமை காலத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்திற்கு சேலஞ்ச் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது என பலரும் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் நடந்து வரும் கொலை, சட்டம் ஒழுங்கு, போராட்டங்களுக்கு மத்தியில் ஸ்டாலினின் இந்த போஸ் பலமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. தவெக கட்சியினர் ‘‘அதிகரித்து வரும் குற்றம், போதைப்பொருள் பிரச்சனைகள் போன்ற பிரச்சினைகளை விட, ஸ்டாலின் தனது பிம்பத்திற்கு முன்னுரிமை அளிக்கிறார்’’ என விமர்சித்து வருகின்றனர்.
"கருமம்" போன்ற இழிவான சொற்களையும், ஊழல்கள் பட்டியல்களையும் போட்டுத் தாக்குகின்றனர். ‘‘அங்கே மக்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இங்கே போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கும் இவரெல்லாம் முதல்வர். நாங்களும் போட்டிக்கு வரலாமா? முதல்வர் வசிக்கும் செனடாப் சாலை வீட்டிலிருந்து 1.5 கிலோ மீட்டர்தான் நந்தனம் அரசுக்கல்லூரி. அங்குதான் ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது. முதல்வர் ஃபோட்டோ சூட்டிலியே பிஸியாக இருக்கட்டும்’’ என கலாய்த்து வருகின்றனர்.
