DMK Manifesto For loksabha elections 2024 : மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். அதனை கனிமொழி பெற்றுக்கொண்டார்

2024 மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி முதல்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு முடிந்துள்ள நிலையில் மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். அதனை கனிமொழி பெற்றுக்கொண்டார். பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மக்களிடம் கருத்துகள் பெறப்பட்ட நிலையில் தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது. 

திமுக சார்பாக போட்டியிடவுள்ள 21 வேட்பாளர்கள் யார்.? புதியவர்களுக்கு வாய்ப்பு.!பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

இதை தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் “ சொன்னதை செய்வோம். சொல்வதை செய்வோம் என்ற அடிப்படையில் திமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய அறிக்கையாக இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம். கனிமொழி தலைமையிலான இந்த குழு சிறப்பாக தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. 

மக்களவை தேர்தல் 2024 : திமுக தேர்தல் அறிக்கை

  • மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்.
  • ஆளுநர் பதவி இருக்கும் வரை, மாநில அரசின் ஆலோசனை பெற்று ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும்
  • ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.
  • புதிய கல்விக்கொள்கை ரத்து செய்யப்படும்.
  • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்
  • அனைத்து மொழிகளுக்கும் சமநிதி ஒதுக்கப்படும்.
  • திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும் 
  • ரயில்வேக்கு தனி நிதிநிலை அறிக்கை 
  • தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடி நீக்கப்படும் 
  • சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்படும் 
  • விமானக் கட்டணம் முறைப்படுத்தப்படும்
  • பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது 
  • மகாத்மா காந்தி வேலை வாய்ப்புத்திட்டம் 100-ல் இருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும் 
  • எல்ஜிபி ரூ.500, பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ. 65 குறைக்கப்படும் 
  • இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தமிழ் மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்
  • ஒன்றிய அரசு பணிகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு, நேர்முக தேர்வு நடத்தப்படும்
  • ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்
  • மகளிர் சுய உதவிக்குழுவுக்கு பத்து லட்சம் கடனுதவி அளிக்கப்படும்
  • நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.
  • நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும்.
  • இந்தியா முழுவதும் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும்.
  • தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
  • மாநில முதலமைச்சர்களை கொண்ட மாநில வளர்ச்சி குழு அமைக்கப்படும்.
  • பாஜக அரசின் தொழிலாளர் நல விரோத சட்டங்கள் மறு சீரமைப்பு செய்யப்படும்.
  • தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்.
  • வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாத போது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.
  • குடியுரிமை திருத்த சட்டம் 2019 ரத்து செய்யப்படும்.
  • ஒன்றிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்
  • ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்.
  • இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
  • உழவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்
  • எல்.பி.ஜி. சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் விலை ரூ.75, டீசல் விலை ரூ.65 ஆக குறைக்கப்படும்.
  • பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது.
  • பாஜக அரசு கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் மறு பரிசீலனை செய்யப்படும்.
  • மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் வரை வட்டியில்லா கல்விக்கடன் வழங்கப்படும்.
  • ரயில்வேயில் வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகை வழங்கப்படும்.